தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கைகளுக்காக செப்டம்பரில் மாபெரும் பேரணி
20 Jul 2026, 9:52 pm

தொழிலாளர்கள், விவசாயிகள் கோரிக்கைகளுக்காக செப்டம்பரில் மாபெரும் பேரணி

இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு!

சென்னை, ஜூலை 20 - தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி, செப்டம்பர் மாதம் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடை

வீதியில் நடக்கும் போராட்டமே மாற்றத்திற்கான வழி

கூட்டத்திற்குப் பின் செய்தியா ளர்களைச் சந்தித்த தலைவர்கள், தற்போது நாட்டில் நிலவும் சமூக, பொருளாதாரச் சூழல்கள் குறித்து விரி வாகப் பேசினர். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றப் போராட்டங்களுடன், சமூக மாற்றத்திற்கு வீதியில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டனர். தொழிலாளர்கள் மற்றும் விவசாயி களின் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் மாநில அளவிலான பிரம்மாண்டப் பேரணியை நடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த னர். இந்தப் பேரணி நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து, ஆகஸ்ட் 4 அன்று நடைபெறவுள்ள அடுத்தகட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

அதிகார வர்க்கத்தின் அணுகுமுறைக்குக் கண்டனம்

தலைமைச் செயலகம் என்பது அதிகார வர்க்கத்தின் கூடம் அல்ல, மக்கள் அதிகாரத்தின் அடையாளம் என்று சுட்டிக்காட்டிய தலைவர்கள், எளிய மக்கள் அமைச்சர்களையும் முதல்வரையும் சந்திப்பதை அதிகார வர்க்கம் அலைக்கழிப்பது ஜனநாய கத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் என்றும், மக்கள் எளிதாக அதிகாரி களைச் சந்திக்கும் சூழலை அரசு உரு வாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி னர்.

பொருளாதாரமும் முறைகேடுகளும்

பொருளாதார விவகாரங்கள் குறித்துப் பேசிய தலைவர்கள், போரி னால் இந்தியா பாதிக்கப்படவில்லை என்ற ஒன்றிய அரசின் வாதம் உண் மைக்குப் புறம்பானது என்றனர். போர்ச் சூழலில் பல நாடுகளின் பொரு ளாதாரம் பாதிப்புக்குள்ளாகி யிருக்கும் நிலையில், இந்தியாவும் இப்பாதிப்பிலிருந்து தப்பவில்லை என்று சுட்டிக்காட்டினர். தொடர்ந்து, பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் உயர்மட்ட அதி காரிகள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை தொடர்புடைய நபர்கள் மீது எந்தவித தலையீடும் இன்றி நேர்மை யான விசாரணை நடத்தி, அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண் டும் என்றும், பக்தர்கள் நம்பிக்கை யின் அடிப்படையில் செலுத்திய காணிக்கைகளைத் திருடியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

எதிர்காலத் திட்டங்கள்

இந்த நிகழ்வில் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் இடதுசாரி கட்சி களின் ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்கவும், தமிழகத்திற்கான சமூக, பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளை உள்ளடக்கிய மாற்று அரசியல் திட்டத்தை ஆகஸ்ட் 4 அன்று வெளியிடவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.