தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு உதயம்!
17 Jun 2026, 9:03 pm

தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு உதயம்!

சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) கட்சிகள் அறிவிப்பு

த்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு உதயமாகி உள்ளதாக இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரே சன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் மாநில அளவிலான ஆலோச னைக் கூட்டம் புதன்கிழமை (ஜூன் 17) அன்று சென்னை தி.நகரில் உள்ள சிபிஐ மாநிலக்குழு அலு வலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் சார்பில் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத் தம்பி ஆகியோர் கூட்டத்திற்குத் தலைமை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் இந்திய மற்றும் தமிழ்நாட்டின் அரசியல் வளர்ச்சிப் போக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் எதிர் கொள்ளக் கூடிய முக்கிய பிரச்ச னைகள் தொடர்பாக மூன்று இடது சாரிக் கட்சிகளும் கூட்டாக செயல் படுவதென முடிவு செய்யப் பட்டுள்ளது.

வர்க்க - வெகுஜன அமைப்பு நிர்வாகிகளின் கூட்டுமேடை

வர்க்க, வெகுமக்கள் அமைப்பு களின் ஒருங்கிணைந்த மேடை யை உருவாக்குவது எனவும், இளைஞர், மாணவர், மாதர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களுக்கு இடையே ஒருங்கிணை ப்பை வலுப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இடதுசாரி ஒருங்கி ணைப்புக் குழுவிற்கு, மக்களின் முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்து பொதுவான வேலை திட்டத்தை உருவாக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

12 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மு. வீரபாண்டியன், டி.எம். மூர்த்தி, நா. பெரியசாமி, எம். ரவி ஆகியோரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பெ. சண்முகம், பி. சம்பத், என். குணசேகரன், கே. சாமு வேல்ராஜ் ஆகியோரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை சார்பில் பழ. ஆசைத்தம்பி, எஸ். பால சுந்தரம், சந்திரமோகன் மற்றும் ஒருவர் (பின்னர் நிரப்பப்படும்) என மொத்தம் 12 பேர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்களாக செயல்படுவர். ஒருங்கிணைப்புக் குழுவிற் கான செயல்திட்டத்தை தயாரித்து அடுத்தக் கூட்டத்தில் ஒப்புதல் களுக்காக முன்வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக் குழு வின் அடுத்தக் கூட்டத்தை ஜூலை 20 அன்று நடத்துவது என்றும், இடதுசாரிக் கட்சிகளின் வர்க்க - வெகுமக்கள் அமைப்புகளின் விரி வடைந்த கூட்டத்தை ஜூலை 10 அன்று சென்னையில் இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பரில் மாநில அளவிலான பேரணி

குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து, செப்டம்பர் மாதம் இறுதியில், இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பிரம்மாண்டப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இடதுசாரி கட்சிகளின் ஒருங்கி ணைப்புக்குழு என்பது தேர்தலுக் கான கூட்டணி அல்ல. மக்கள் பிரச்சனைகளுக்கு போராடுவதற் கான, தமிழ்நாட்டின் எதிர்காலத் திசைவழியை இடதுசாரிகளின் பக்கம் திருப்புவதற்கான, மாற்று அரசியல் திசைவழியைப் பற்றிய விழிப்புணர்வு ஊட்டுவதற்கான இயக்கமாகும்.

பிரச்சனைகளுக்கு தீர்வு இடதுசாரி மாற்றே!

இன்றைய முதலாளித்துவ சமூகப் பொருளாதார அமைப்புக்கு மாற்று சோசலிசம் தான் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகை யில் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கி ணைப்புக் குழு செயல்படும். இன்றையக் கூட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன், மாநில துணைச் செயலாளர் என். பெரியசாமி, எம். ரவி, தேசிய நிர்வாகக்குழு உறுப்பி னர் டி.எம். மூர்த்தி, மாநில நிர்வா கக்குழு உறுப்பினர்கள் பி. பத்மாவதி, டாக்டர் ஜி.ஆர். ரவீந்திர நாத், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தி யக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், என். குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) விடுதலை, சார்பில் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி, எஸ். பாலசுந்தரம், சந்திரமோகன் இரணியப்பன், ஜானகிராமன், எம். கோபால், புவனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.