சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற இடதுசாரிகள் ஆலோசனைக் கூட்டம்!
5 Jun 2026, 2:49 pm

சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்.எல்)லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகமான பி. ராமமூர்த்தி நினைவகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ(எம்.எல்)லிபரேசன் மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்தும், இடதுசாரி கட்சிகள் கூட்டாக செயல்படுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் போது சிபிஐ(எம்) சார்பில் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், என். குணசேகரன், சிபிஐ சார்பில் மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் க. சந்தானம், சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் வீ. சங்கர், எஸ். குமாரசாமி, மத்தியக்கமிட்டி உறுப்பினர் எஸ். பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.