‘உழைக்கும் மக்களுக்கான உண்மையான மாற்றுச் சக்தி இடதுசாரிகளே’ மதுராந்தகம், தாராபுரம் பொதுக்கூட்டங்களில் தலைவர்கள் முழக்கம்
30 Sept 2026, 9:54 pm

‘உழைக்கும் மக்களுக்கான உண்மையான மாற்றுச் சக்தி இடதுசாரிகளே’ மதுராந்தகம், தாராபுரம் பொதுக்கூட்டங்களில் தலைவர்கள் முழக்கம்

சென்னை, செப்.30 -மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் வேட்பாளர்களான மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பா.சுகந்தி, தாராபுரத்தில் இந்திய கம்யூ

னிஸ்ட் கட்சியின் ப. லட்சுமணன் ஆகியோரை ஆதரித்து இரு தொகுதிகளிலும் செப்டம்பர் 29 அன்று மாபெரும் பிரச்சார பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.

உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைக் காகவும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் களத்தில் நின்று போராடும் உண்மையான மாற்றுச் சக்தி இடதுசாரிகளே என்பதை முன்னிறுத்தி தலைவர்கள் உரையாற்றி னர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக, அதிமுக-பாஜக ஆகிய மூன்று அணிகளும் இடதுசாரிகளுக்கு எதிராகப் போட்டியிட்டாலும், உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள இவ்விரு தொகுதிகளிலும் இடதுசாரி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

‘தனியார்மயத்திற்கு அணைபோடுவோம்’ — கே. பாலகிருஷ்ணன்

மதுராந்தகம் கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் ஒருபோதும் கட்சி மாறாத நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே எனவும், மக்களுக்காக எப்படி உழைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தே வேட்பாளர் தேர்வு நடப்பதால் 25-30 ஆண்டுகளாகக் களத்தில் போராடி வரும் தோழர் சுகந்தி நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது, மின்சார வாரியக் கணக்கெடுப்புப் பணியைத் தனியாருக்கு வழங்குவது என அரசு அனைத்துத் துறைகளிலும் தனியார்மயத்தைப் புகுத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்தக் கொள்கைகளுக்கு அணைபோட இடதுசாரிகளின் வெற்றி இன்றியமையாதது என்றார். ஒன்றிய பாஜக அரசின் 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் எனத் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே அரசு கேரளாவின் இடதுசாரி அரசே எனவும், இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் மீது லஞ்சம், கமிஷன், சொத்துக் குவிப்பு என எந்தக் குற்றமும் சாட்ட முடியாது என்பதால் சுகந்தி வென்றால் ஊழலுக்கே இடம் இருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

‘களத்தில் போராடும் ஒரே இயக்கம்’ — உ. வாசுகி

அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ. வாசுகி பேசுகையில், மக்கள் மற்றும் உழைப்பாளி வர்க்க நலனுக்காகக் களத்திலும் தேர்தலிலும் தொடர்ந்து போராடும் ஒரே இயக்கம் இடதுசாரிகள் மட்டுமே எனவும், களப்போராட்டத்தின் நீட்சியே தேர்தல் போராட்டம் எனவும், அதற்குச் சிறந்த உதாரணம் வேட்பாளர் சுகந்தி எனவும் தெரிவித்தார். மன் மோகன் சிங் ஆட்சியில் இடதுசாரிகள் வெளியிலிருந்து ஆதரவளித்தபோதே 100 நாள் வேலை உறுதிச் சட்டம், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம், சச்சார் கமி ஷன் கொண்டுவரப்பட்டதாகக் கூறிய அவர், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் உணவுப் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து இடதுசாரிகள் மட்டுமே குரல் எழுப்புவதாகத் தெரிவித்தார். மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளிக் குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களைச் சுட்டிக் காட்டிய அவர், பெண்கள், குழந்தைகள், தலித்துகள், பழங்குடியினர் மீதான வன்முறையைத் தடுக்கச் சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு கூட்டி அரசு நீண்டகாலத் திட்டம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஏப்ரல் தேர்தலில் அதிமுகவில் வென்ற மரகதம் குமரவேல் 20 நாட்களிலேயே ராஜினாமா செய்து தவெகவுக்குத் தாவியதால் திணிக்கப்பட்ட இந்தச் சுயநல அரசியலுக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

‘நான்கு பேரின் குரல் உழைக்கும் மக்களின் குரல்’ — மு. வீரபாண்டியன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேசுகையில், இடதுசாரிகள் என்பது மூன்று கட்சிகள்மட்டுமல்ல, பெரியார், அம்பேத்கர், காந்தி கருத்தியல் கொண்ட சிந்தனையாளர்கள், நல்லறிஞர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரையும் உள்ளடக்கியது எனக் கூறி, அவர்கள் அனைவரின் ஆதரவை யும் இருகரம் கூப்பிக் கோரினார். சட்டமன்றத்தில் மற்ற கட்சிகளின் பெரும்பான்மைக் குரல் செல்வந்தர், கார்ப்பரேட், அதிகார வர்க்கத்தின் குரல் எனவும், இடதுசாரிகளின் நான்கு பேரின் குரல் உழைக்கும் ஏழை மக்களின், தர்மத்தின் குரல் எனவும் அவர் தெரிவித்தார். இடைத்தேர்தலை மக்களோடு அரசியல் உரையாடலுக்குப் பயன்படுத்துவதாகக் கூறிய அவர், 13 கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பொறுப்பு எனவும், காஸாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆதரவாக நிற்பது வெட்கக்கேடு எனவும் விமர்சித்தார். செல்வந்தர் களோ அதிகாரமோ இல்லாத, பொது வாழ்வில் சொத்து சேர்க்காத ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கமே எனக் கூறிய அவர், ‘Turn on the left’ என்ற முழக்கத்து டன், அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்தில் சுகந்திக்கு வாக்களிக்குமாறு கோரினார்.

‘குடிமனைப் பட்டா தீராத பிரச்சனை’ — பெ. சண்முகம்

தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ப. லட்சுமணனுக்கு ஆதர வாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் உழைப்பாளி மக்கள் பெரும்பான்மையாக உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் அனை

வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்திய போராட்டங்களால் ஏதோ ஒரு வகையில்

பயனடைந்துள்ளதால் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். இருவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து ஆளுங்கட்சியில் சேர்ந்ததால்தான் இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டது எனக் குறிப்பிட்ட அவர், இடதுசாரிகளுக்குப் போடும் ஓட்டு வீணானது என்ற பிரச்சாரம் எடுபடாது எனவும், தவெக வேட்பாளர்கள் இம்முறை தோல்வியடைவார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

குடிமனைப் பட்டா தமிழ்நாடு முழுவதும் தீர்க்கப்படாத பிரச்சனையாக இருப்பதாகக் குறிப்பிட்ட சண்முகம், 1949 முதல் ஆண்டுக்கு மூன்று லட்சம் பேருக்குப் பட்டா வழங்கியதாகக் காகி தத்தில் இருந்தாலும், நடைமுறையில் மக்கள் விண்ணப்பித்துக் கொண்டே இருப்பதாகவும், 78 ஆண்டுகளில் உண்மையில் வழங்கியிருந்தால் கோடிக்கணக்கானோருக்குப் பட்டா கிடைத் திருக்கும் எனவும் கூறினார். ஒரு குடும்பம் கூட வீடின்றி இருக்கக் கூடாது என்ற சாதனையை கேரள மாநிலத்தில் இடதுசாரி அரசு நிகழ்த்தியிருக்க, தமிழகத்தில் ஏன் முடியாது எனக் கேள்வி எழுப்பியஅவர், மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்குச் சட்டமன்றத்தில் வலிமையாகக் குரல் கொடுக்க இடதுசாரி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். சிபிஐ(எம்.எல்.) மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்ட தலைவர்களும் கூட்டங்களில் பங்கேற்றனர்.