தலைவர்கள் கைது - முன்னணி ஊழியர்கள் மீது தாக்குதல்கள்! தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்குவீர்!
10 Oct 2026, 10:34 pm

தலைவர்கள் கைது - முன்னணி ஊழியர்கள் மீது தாக்குதல்கள்! தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்குவீர்!

சென்னை, அக். 10 -தில்லியில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கை, முன்னணி ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்குமாறு, இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத் துள்ளன.இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐ(எம்-எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

துணைராணுவப் படையை இறக்கிய ஒன்றிய பாஜக அரசு

தலைநகர் தில்லியில் காவல் துறை, துணை ராணுவப் படையினர் கடுமையான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி சனிக்கிழமையன்று புதுதில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அறைகூவல் விடுக் கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத் திற்கு இடதுசாரிக் கட்சிகளும் - வெகுஜன அமைப்புகளும் ஆதரவைத் தெரிவித்து இருந்தன.

இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் கைது!

இந்தப் பின்புலத்தில் கைது வேட் டையும், தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தில்லிக் கான 254 ரயில்கள் ரத்து செய்யப்பட் டுள்ளன. 54 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 35,000 காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியான முறையில் போராட் டம் நடத்த உரிமை உண்டு என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுரை கூட செவிமடுக்கப்படவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிபொதுச்செயலாளர் து. ராஜா மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) லிபரேசன் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் தில்லியில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இடதுசாரி வாலிபர், மாணவர், அமைப்புகளின் தலைவர்கள், முன் னணி ஊழியர்களும் கைது செய்யப் பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை சில மணி நேரங்களாக காவல்வாகனத்தில் வைத்துக் கொண்டே சுற்றி வருகிறார்கள்.

ஜந்தர் மந்தருக்கே வரவிடாமல் அடக்குமுறை

ஜந்தர் மந்தர் பகுதியில் ஒன்றிய அரசின் டில்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கடுமை

யான அடக்குமுறைகளை ஏவி விட் டுள்ளனர். போராட்டக்காரர்களை ஒன்று சேர விடாமல் ஆங்காங்கே கைது செய்துள்ளனர். கட்சி, வெகுஜன அமைப்பு அலுவலகங்கள் துணை ராணுவப் படையாலும், ஒன்றிய அர

சின் காவல்துறையினாலும் முற்றுகையிடப்பட்டுள்ளன. ஜனநாயக மறுப் பின் உச்சகட்டமாக அரங்கேற்றப் பட்டுள்ள இத்தகைய தாக்குதல்களை இடதுசாரிக் கட்சிகள் வன்மையாககண்டிக்கின்றன.

இந்த அடக்குமுறை, கைதைக் கண்டித்தும், ஞானேஷ் குமாரைப் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆங்காங்கே இடதுசாரிக் கட்சிகள் சார்பில் உடனடியாக கண்டன இயக்கங்கள் நடத்திட இடதுசாரி கட்சிகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.