இடது ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
18 Nov 2025, 2:35 pm
<p><strong>இடது ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு</strong></p>
<p>கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் (எல்டிஎப்) தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ஏகேஜி மையத்தில் நடைபெற்ற இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் டி.பி.ராமகிருஷ்ணன், சிபிஐ மூத்த தலைவர் சத்யன் மோக்கேரி உள்ளிட்ட எல்டிஎப் தலைவர்கள் பங்கேற்றனர்.</p>
