நாளை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு புதுச்சேரி மக்கள் ஆதரவளிக்க வேண்டும் இடதுசாரிகள் மற்றும் விசிக தலைவர்கள் வேண்டுகோள்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>நாளை வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு புதுச்சேரி மக்கள் ஆதரவளிக்க வேண்டும் இடதுசாரிகள் மற்றும் விசிக தலைவர்கள் வேண்டுகோள்</strong></p>
<p>புதுச்சேரி, பிப். 10- பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து நாளை நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் புதுச்சேரி மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் கூட்டாக அறைக்கூவல் விடுத்துள்ளனர். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு ஒருங்கிணைப்பாளர் பெருமாள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் அரிமா தமிழன், சிபிஐ (எம்.எல்) கட்சியின் மாநிலத் தலைவர் சோ. பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வியாழக்கிழமை (பிப்.12) நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கின்றனர். புதுச்சேரியின் மக்கள் தொகையில் சுமார் 5 லட்சம் பேர் அமைப்பு சாரா தொழி லாளர்கள்தான். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டத்தைப் புதுச்சேரி யில் ஆளும் ஆட்சியாளர்கள் அமல்படுத்த வில்லை. என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் ஒப்பந்த ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என அறிவித்திருந்தனர். ஆனால் ஒப்பந்த ஆசிரியர்கள், செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரித் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் ஊதியத்தை உயர்த்தியது சாதனை அல்ல. தொழிலாளர்கள் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய தொழிலாளர் துறையில் முழு நேர ஆணையர் கூட இல்லை. இதையெல்லாம் கண்டித்து நாளை வேலைநிறுத்தப் போராட்டம் புதுச்சேரியில் நடைபெறுகிறது. வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கடை ஊழி யர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் பேருந்துகள், ஆட்டோ, டெம்போ வாக னங்கள் இயங்காது. தொழிற்பேட்டை கள் இயங்காது. இந்தப் போராட்ட த்திற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டத்தையொட்டி புதுவை பேருந்து நிலையம், திருக்கனூர், வில்லியனூர், பாகூர், சேதராப்பட்டு, நெட்டப்பாக்கம், அரியாங்குப்பம், காரைக்கால் உட்பட 9 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு மற்றும் புதுச்சேரியில் ஆளும் என். ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்து நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்தப் பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏ நாரா கலை நாதன் உள்ளிட்ட இடதுசாரி மற்றும் விசிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.</p>
