சமூக அக்கறையோடு செயல்பட்டவர் ம.அந்தோணிசாமி பணி நிறைவு பாராட்டு விழாவில் தலைவர்கள் புகழாரம்
31 Mar 2026, 4:50 pm
<p><strong>சமூக அக்கறையோடு செயல்பட்டவர் ம.அந்தோணிசாமி பணி நிறைவு பாராட்டு விழாவில் தலைவர்கள் புகழாரம்</strong></p>
<p>சென்னை, மார்ச் 31- சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இளநிலை பொறி யாளராக பணியாற்றி ஓய்வு பெறும் ம.அந்தோணிசாமியின் பணி நிறைவை பாராட்டும் வகையில் உறவுகளின் சங்கமம் நிகழ்ச்சி ஏ.ஜான்மில்டன் தலைமையில் திங்களன்று (மார்ச் 30) ஓட்டேரியில் நடை பெற்றது. சென்னையில் வேலை தேடி வந்து, தொழிலாளியாக பணியைத் தொடங்கி சிஐடியு தொழிற்சங்கத்தில் செயல்பட்டார். அது மட்டுமல்லாது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து பகுதி பிரச்சனைகளுக்காகவும் களத்தில் நின்று போராடினார். பின்னர் அரசு ஊழியராக பணியில் சேர்ந்து பிறகு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் இணைந்து வடசென்னை மாவட்டச் செயலாளராக பணியாற்றினார். எப்போது சமூக அக்கறையோடு செயல்பட்டவர் என தலைவர்கள் புகழாரம் சூட்டினர். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் சி.திருவேட்டை, தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் இ.சர்வேசன், தமிழ்நாடு அரசு மேல்நிலை, உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்.அருணா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வே.விஜயகுமரன், முன்னாள் மாநில துணைத்தலைவர் எஸ்.ஏ.வெற்றிராஜன், வடசென்னை மாவட்ட முன்னாள் செய லாளர் ஜெ.பட்டாபி, வி.செல்வராஜ் (சிஐ டியு), சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஸ்ரீனி வாசலு, இரா.தெ.முத்து (தமுஎகச) மற்றும் ஏ.வெண்மணி உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் அவரது பணிகளை பாராட்டி பேசினர். ஏ.ஜான்சிராணி நன்றி கூறினார்.</p>
