முந்தய பக்கம்

தோழர் மணி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

23 Feb 2026, 5:35 pm
தோழர் மணி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
<p><strong>தோழர் மணி உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி</strong></p> <p>செங்கல்பட்டு, பிப். 23- மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் முன்னாள் வட்டக் குழு உறுப்பினர் தோழர் எ.சி.எஸ்.மணி (83) வயது மூப்பின் காரண மாக திங்களன்று (பிப் 23) காலமானார். இந்திய தபால் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் மதுராந்தகம் வட்டக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களில் பணியாற்றியவர். மதுராந்தகம் தென்ராயன் தெருவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.மாசிலா மணி, எம்.எஸ்.அர்ஜுன் குமார், கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜி.மோக னன், தமுஎகச மாவட்ட செயலாளர் இ.சங்கர தாஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் &nbsp;மாநில துணை பொது செயலாளர் சி.முகமது உசேன், மாவட்டத் துணைத் தலைவர் கே.பூங்குழலி மற்றும் பல்வேறு அமைப்பு களின் தலைவர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து திங்களன்று (பிப்.23) மாலை இறுதி நிகழ்ச்சி நடை பெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram