முந்தய பக்கம்

ஏ. கிருஷ்ணமூர்த்தி உடலுக்குத் தலைவர்கள் அஞ்சலி

18 Feb 2026, 3:04 pm
ஏ. கிருஷ்ணமூர்த்தி உடலுக்குத் தலைவர்கள் அஞ்சலி
<p><strong>ஏ. கிருஷ்ணமூர்த்தி உடலுக்குத் தலைவர்கள் அஞ்சலி</strong></p> <p>கடலூர், பிப். 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், குடிநீர் வடிகால் வாரிய முன்னாள் மேற்பார்வை பொறியாளருமான ஏ.கிருஷ்ணமூர்த்தி (94) செவ்வாய்க்கிழமை (பிப்.17) கால மானார். கடலூர் அழகப்பா நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டி ருந்த அவருடைய உடலில் செங்கொடி போர்த்தப்பட்டு, புதன்கிழமை மதியம் மஞ்சக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. &nbsp;சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், ஏ. கிருஷ்ணமூர்த்தி உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் கோ. மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் டி. ஆறுமுகம், எஸ்.தனசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. கருப்பையன், வி. சுப்புராயன், ஜே. ராஜேஷ் கண்ணன், ஆர். அமர்நாத், ஜி. ஆர். ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ். கே. பக்கிரான், ஆர். ஆளவந்தார், எஸ். தட்சிணாமூர்த்தி, குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் எம். மருதவாணன், பொதுச் செயலாளர் பி. வெங்கடேசன், பொருளாளர் ரமணி, ஓய்வூதியர் சங்கத் தலைவர்கள் ஆர். மனோகரன், டி. புருஷோத்தமன், என்.காசிநாதன், குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத் தலைவர் ஜெயச்சந்திரன், அகில பாரத பென்சனர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ச. சிவ ராமன், மாநகரத் தலைவர் என். பக்கிரி, கிருஷ்ணா மருத்துவமனை சேர்மன் ரம்யா உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram