தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தலைவர்கள்!

5 May 2026, 9:21 pm
மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து  நன்றி தெரிவித்த தலைவர்கள்!

மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தலைவர்கள்!

சென்னை, மே 5 - தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை யடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

திருமாவளவன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழ மை (மே 5) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.

நடைபெற்று முடிந்த தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைத் தமைக்காக கூட்டணியின் தலைவரான மு.க. ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்த னர்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் மதிமுக, சிபிஐ, விசிக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்களும் முதல்வரைச் சந்தித்தனர்.

சங்-பரிவாரங்களை முறியடித்துள்ளோம் இந்த சந்திப்புக்குப் பின்னர் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்.

இதில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், “திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் வகையில் வெற்றி பெறவில்லை என்றாலும், நாங்கள் முன்னெடுத்த முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்திருக்கிறது.

அதிமுக முதுகில் ஏறிக்கொண்டு பாஜக உள்ளிட்ட சங்கப்பரிவார் சக்திகள் தமிழ்நாட்டில் கோலோச்ச திட்டமிட்டார்கள்.

அதை முறியடிப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டு நாங்கள் களமிறங்கி னோம்.

அதில் நூறு விழுக்காடு வெற்றி பெற்றோம்.

யூகமாக பதிலளிக்க முடியாது தவெகவை எதிர்ப்பின் இலக்காக நாங்கள் முன்னிறுத்தவில்லை; எங்கள் குறி அதிமுக, பாஜக வலிமை பெற்றுவிடக் கூடாது என்பதில் தான் இருந்தது.

தமிழ் நாட்டில் சங்-பரிவார்கள் இனி காலூன்று வதற்கு வாய்ப்பில்லை என்பதை மக்கள் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது” என்றார்.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு, “தேர்தல் முடிந்து ஒன்று இரண்டு நாட்களே ஆகியிருக்கின்றன.

அது யூகமான கேள்வி; நீங்கள் யூக மாகவே எழுதிக்கொள்ளுங்கள்” என்றார்.

மே 7 அன்று இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

தவெக-வால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா, என்ற கேள்விக்குப் பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்.

மெஜாரிட்டி கிடைக்குமா, கிடைக்காதா என்பது எங்களுடைய பிரச்சனை இல்லை” என்று கூறினார்.

பின்னர் இந்த மூன்று தலைவர்களும், சிபிஎம் அலுவலகத்தில் கூடி மே 7 ஆர்ப்பாட்டம் குறித்த வழிமுறைகளை உருவாக்கினர்.

சிபிஐ(எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.