முந்தய பக்கம்

92 வயதிலும் களப்பணியாற்றும் கட்சி உறுப்பினரை நலம் விசாரித்த தலைவர்கள்

7 Dec 2025, 3:52 pm
92 வயதிலும் களப்பணியாற்றும் கட்சி  உறுப்பினரை நலம் விசாரித்த தலைவர்கள்
<p><strong>92 வயதிலும் களப்பணியாற்றும் கட்சி &nbsp;உறுப்பினரை நலம் விசாரித்த தலைவர்கள்</strong></p> <p>விழுப்புரம், டிச.7- ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட மாக இருந்ததில் இருந்து இருந்து வந்த 92 வயது மூத்த உறுப்பினரை விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நலம் &nbsp;விசாரித்தனர். விழுப்புரம் மாவட்டம், திரு வெண்ணெய்நல்லூர் வட்டம், தக்கா கிராமத்தைச் சேர்ந்தவர் கே.எம்.ஜெ என்று அனைவராலும் அழைக்கப்படும் கே.எம்.ஜெயராமன். இவர் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்ததில் இருந்து சிபிஎம்-ல் இருந்து வந்தவர். தற்போதும் அப்பகுதியில் நடக்கும் கட்சி யின் மக்கள் நலன் சார்ந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றில் இந்த 92- வயதிலும் இளைஞனை போல் கலந்து கொண்டு வருகிறார். மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் அமைந்துள்ள மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, அவரது சொந்த கிராமத்திற்கு நேரில் சென்று பார்த்து நலன் விசாரித்தனர். அப்போது மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சிவராமன், கே. வீரமணி உட்பட பலர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram