தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கண்டனம்!

22 Jul 2026, 9:46 pm
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு  அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கண்டனம்!

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கண்டனம்!

சென்னை, ஜூலை 22 - தில்லியில் நடத்தப்பட்ட தாக்குத லுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் கண்டனம்!

நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப் பட்டதற்குத் தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர், “ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வு முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; சட்டச் சிக்கல்கள் இருந்தால் சிறப்புப் பட்டியலை உருவாக்கி, கல்விச் சுதந்திரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து, மத்திய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வு ரத்தே தீர்வு: மு.க. ஸ்டாலின்

“தில்லியில் நடைபெறும் மாணவர் களின் போராட்டம் நாடு முழுவதும் கவ னத்தை ஈர்த்துள்ளதாகவும் தமிழ்நாட்டின் ஒரே கோரிக்கை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித் துள்ளார். மேலும், நீட் தேர்வை முழுமை யாக ரத்து செய்வது மட்டுமே சிக்கல்கள் அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வு” என்றும் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘போராட்டத் தீ பரவட்டும்’: பெ. சண்முகம்

தில்லியில் நடத்தப்பட்ட தாக்குதலுக் கும், இந்த தாக்குதலைக் கண்டித்து சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடு பட்ட மாணவர்களைத் தமிழக காவல்து றையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கும் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.

“நாட்டின் தலைநகரான புதுதில்லி யில் அடக்குமுறைகளை மீறி மாணவர் களின் போராட்டம் இரவு - பகலாகத் தொ டர்ந்து நடைபெறுகிறது. தில்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் போராடுவதற்குக் காவல்துறை அனுமதி மறுப்பதும், தடுப்பதும், கைது செய்வ தும் வன்மையான கண்டனத்திற்குரி யது. செவ்வாயன்று மாலை டிஒய்எப்ஐ - எஸ்எப்ஐ சார்பில் நடைபெற்ற போராட் டத்தில் கலந்துகொண்டவர்களைக் காவல் துறை வலுக்கட்டாயமாகக் கைது செய்து, இரவு 10 மணிக்கு மேல் விடுவித்தது. தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவி போராட்டங்களை ஒடுக்குவதை ஏற்க முடி யாது; போராட்டத் தீ பரவட்டும்!” என பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

திரையுலகின் ஆதரவுக் குரல்கள்

மாணவர் போராட்டத்திற்கு ஆதர வாக, இயக்குநர் பா. ரஞ்சித், திரைக்கலை ஞர்கள் பிரகாஷ் ராஜ், ஷபானா அஸ்மி, ரேவதி, அபிராமி, சோனு சூட், ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா, சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

ஜந்தர் மந்தரில் அமைதியாகப் போரா டிய மாணவர்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறையையும், 21 நாள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதையும் இயக்குநர் பா. ரஞ்சித் கண்டித்துள்ளார். போராட்டங்களுக்குப் பணிந்து முன்னு தாரணம் உருவாக்க அரசு விரும்பாத தால் கல்வி அமைச்சர் பதவி நீக்கம் செய்யப் படமாட்டார் என்றே கருதுவதாக நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.