தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதச்சார்பின்மையை பாதுகாக்க சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜ் வெற்றியை உறுதி செய்வோம் செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைவர்கள் சூளுரை

2 Apr 2026, 3:50 pm
மதச்சார்பின்மையை பாதுகாக்க  சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜ்  வெற்றியை உறுதி செய்வோம் செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைவர்கள் சூளுரை
<p><strong>மதச்சார்பின்மையை பாதுகாக்க &nbsp;சிபிஎம் வேட்பாளர் எல்.சுந்தரராஜ் &nbsp;வெற்றியை உறுதி செய்வோம் செயல்வீரர்கள் கூட்டத்தில் தலைவர்கள் சூளுரை</strong></p> <p>சென்னை, ஏப். 2- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எல்.சுந்தரராஜ் அறிமுகக் கூட்டம், கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் புதனன்று (ஏப். 1) மாவட்ட அவைத் தலைவர் எஸ்.கணேசன் தலைமையில் நடை பெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலா ளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், இந்த தொகுதியில் ஒரு தொழிலா ளியை, ஒரு பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த எல்.சுந்தரராஜை வேட்பாள ராக இந்த கூட்டணி நிறுத்தியிருக் கிறது. அவரை வீதி வீதியாக அழைத்துச் சென்று இந்த தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பதை மக்களிடம் பட்டியலிட்டு சொல்ல வேண்டும். அதேபோல் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 8,000 ரூபாய் கூப்பன் என்பது இந்தியாவில் யாருமே அறிவிக்காத ஒரு திட்டம். அதை அனைத்து பகுதி மக்களிடமும் எடுத்துக் கூற வேண்டும். இங்கு எல்.சுந்தரராஜை வேட்பாளராக தலை வர் மு.க.ஸ்டாலின் நிறுத்தியிருக்கி றார். இவர் நம்மில் ஒருவர். இங்கே வேட்பாளர் பெயர் வேண்டுமானால் எல்.சுந்தரராஜ் ஆக இருக்கலாம், ஆனால் நிற்கும் வேட்பாளர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாமனிதரால் அடையாளம் காட்டப்பட்டவர். திமுக வேட்பாளர் நின்றால் எந்த அளவுக்கு உழைப்பீர்களோ, அதை விட அதிகமாக உழைத்து சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில், தேர்தல் விதிகள் இப்போது மிகவும் கடுமையாக்கப்பட்டு இருப்பதால், பட்டாசு வெடிப்பது உட்பட அனைத் தையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசுகையில், தமிழ் நாட்டை இதர மாநிலங்களோடு ஒப்பிடும்போது, ஒரு மதச்சார்பற்ற சமூக நல்லிணக்கத்தை கட்டிக் காக்கும் அரசாக திமுக அரசு இருக்கி றது. அது மீண்டும் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டணி &nbsp;அமைந்திருக்கிறது. மற்ற பல கட்சி கள், மற்ற கூட்டணிகளை ஒப்பிடும் போது, அது பாட்டாளி மக்கள் கட்சி யாக இருந்தாலும், அதோடு சேர்ந்து &nbsp;இருக்கும் அதிமுகவாக இருந்தாலும் அது கொள்கை கூட்டணி இல்லை. அது ஒரு அடிமை கூட்டணியாக இருந்து கொண்டிருக்கிறது. தில்லியை தலைமையிடமாகக் கொண்டு மாநிலங்களை, மாநிலக் கட்சிகளை அடக்கியாளும் ஒரு கூட்டணியாக அதிமுக - பாஜக கூட்டணி இருக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு மட்டு மல்ல, இதர பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்கள் உட்பட எல்லோருக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக தலைமை யிலான ஒன்றிய அரசு. ஒன்றிய ஆட்சியை அடியோடு வீழ்த்தி அடக்க வேண்டிய கடமை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான உணர்வு எல்லா பகுதி மக்களிடமும் இருக்கிறது. 234 தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும். திரு வொற்றியூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் செய்தி ருக்கக் கூடிய பணியை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எல்.சுந்தரராஜனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும் பணியை நம் கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் நிச்சயம் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருக்கிறது என்றார். மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், மீனவர் அணி துணைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கிழக்கு பகுதி செயலா ளர், மண்டலக்குழு தலைவர் தி.மு. தனியரசு, மேற்கு பகுதிச் செயலா ளர் வை.ம.அருள்தாசன், மத்திய பகுதிச் செயலாளர் ஏ.வி.ஆறுமுகம், தொகுதி பொறுப்பாளர் எஸ்.மோகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் எர்ணாவூர் நாராயணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மாத ரம்மாகனி பாரூக், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எம்.ராமகிருஷ்ணன், விசிக மாவட்டச் செயலாளர் ஜான் அலெக் சாண்டர், தேமுதிக மாவட்டச் செய லாளர் எம்.செந்தில்குமார் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.ஜாபர் உசேன், என்.இப்ராஹீம் காஜா, நசீர் அகமத், எல்.ஜாபர் சாதிக், எஸ்.டி.மோகன், என்.ராஜேந்திரன், 4ஆவது வார்டு கவுன்சிலர் &nbsp;ஆர்.ஜெய ராமன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான கூட்டணிக் கட்சி தலை வர்கள், பகுதி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.