முந்தய பக்கம்

இது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்

12 Apr 2026, 5:30 am
இது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்

இது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ் உறுதி. கொச்சி: கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தாமஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியான கே.வி. தாமஸ் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும். காரணம் மக்கள் பணியில் எல்டிஎப் சிறந்து விளங்குகிறது.

ஆனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) உட்பூசலில் தான் சிதறுண்டுச் செயல்படுகிறது. இதனால் யுடிஎப் ஆட்சியமைக்க முடியாது. பாஜக அரசியல் புகலிடம் தேடும் கலாச்சாரத்தை கொண்டு வருகிறது.

தேவாலயங்களை எங்களுக்கு (பாஜகவிற்கு) ஆதரவு அளிக்கவில்லை என்றார். பதிலுக்கு பாஜகவும் தேவாலயங்களுக்கு உதவ மாட்டோம் என்று பாஜகவினர் மிரட்டல் விடுகின்றனர். பாலக்காட்டில் நடந்த சம்பவங்களோடு இதற்கு சாட்சி.

பாஜகவினர் முகமூடி அணிந்த ஓநாய்களாக வருகின்றனர். தங்கள் பேச்சின் மூலம் தேவாலயங்களை மிரட்டப் பார்க்கிறார்கள். ஆனால், கேரளத்தில் இது பலிக்காது" என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram