உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆராயப்படும் எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் டி.பி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு
13 Dec 2025, 4:23 pm
<p><strong>உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆராயப்படும் எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் டி.பி.ராமகிருஷ்ணன் அறிவிப்பு</strong></p>
<p>திருவனந்தபுரம் கேரளத்தில் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றன. 6 மாநகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) -4, இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) -1, தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) - 1 என முன்னிலை பெற்றுள்ளன. 86 நகராட்சிகளில் யுடிஎப் – 54, எல்டிஎப்- 28, என்டிஏ 2 இடங்க ளில் முன்னிலை பெற்றன. 14 மாவட்ட பஞ்சா யத்துகளில் எல்டிஎப்பும், யுடிஎப்பும் தலா 7 என சமநிலை பெற்றுள்ளன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் (பிளாக் பஞ்சாயத்து) யுடிஎப் 78, எல்டிஎப், 64, என்டிஏ- 0, 941 கிராம பஞ்சாயத்துகளில் யுடிஎப் 503, எல்டிஎப் 342, என்டிஏ 26 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. பந்தளம் நகராட்சியில் பாஜக தோல்வி பந்தளம் நகராட்சியில் அதிகாரத்தில் இருந்த பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 34இல் 14 இடங்களை எல்டிஎப் வென்றது. யுடிஎப் 11, பாஜக 9 இடங்களில் முன்னிலையில் இருந்தன. கடந்த முறை, பந்தளத்தில் எல்டிஎப் 9 இடங்களை மட்டுமே பெற்றது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள குளநடா கிராம பஞ்சாயத்தில் பாஜக ஆட்சியை எல்டிஎப் முடிவுக்குக் கொண்டு வந்தது. எல்டிஎப் 17 இல் 12 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. கடந்த முறை, எல்டிஎப் நான்கு இடங்களை மட்டுமே வென்றிருந்தது. மக்களின் கருத்துக்கள் மதிக்கப்படும் இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆராயப்பட்டு பின்னர் முன்னோக்கி செல்வோம் என்று எல்டிஎப் ஒருங்கிணைப்பா ளர் டி.பி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எல்டிஎப் அரசாங்கம் மக்களுக்கு அதிகபட்ச மாகச் செய்ய முயற்சித்தது. ஏன் இத்தகைய தீர்ப்பு எட்டப்பட்டது என்பது ஆராயப்படும். ஆனால் மக்களின் கருத்துக்கள் மதிக்கப்படும். மேலும் உறுதியான நிலைப்பாடுகள் எடுக் கப்படும். கீழிருந்து மேல்நோக்கி ஆய்வுக்குப் பிறகு திருத்தப்பட வேண்டிய விஷயங்கள் ஏதேனும் இருந்தால், அவை சரி செய்யப் பட்டு முன்னோக்கி நகர்வோம்” என அவர் கூறினார்.</p>
