முந்தய பக்கம்

புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டல்

24 Feb 2026, 3:55 pm
புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டல்
<p><strong>புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டல்</strong></p> <p>நாகப்பட்டினம், பிப்.24- &nbsp;நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதிக்கு உட்பட்ட கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வெண்மணச்சேரி ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறை மூலமாக ரூ.190.75 லட்சத்தில் சக்கிலியன் வாய்க்காலில் புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. &nbsp;கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி, திமுக கீழையூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சி திமுக செயலாளர் சார்லஸ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வெங்கட்ராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், ஒன்றிய பொறியாளர் கவிதா ராணி மற்றும் கிராமவாசிகள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram