நாளை அறந்தாங்கியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>நாளை அறந்தாங்கியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் </strong>அறந்தாங்கி, டிச.3 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வழக்கறிஞர் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சங்க தலைவர் வழக் கறிஞர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் விசாரணை நீதிமன்றங்களில் கட்டாய இணையதள பதிவேற்ற முறையில் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் சந்திக்கும் நடைமுறை சார்ந்த பிரச்சனைகளை உயர்நீதிமன்றம் சரி செய்ய வலியுறுத்தி, அறந்தாங்கி வழக்கறிஞர் சங்கம் டிச.3 முதல் டிச.6 ஆம் தேதி வரை அடையாளமாக நீதிமன்ற பணிகளிலிருந்து விலகி இருப்பது. டிச.5 (வெள்ளிக்கிழமை) அன்று காலை அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் இரா.அருண்ராஜ், இணை செயலாளர் சை. சேக்ராவுத்தர், பொருளாளர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
