மதுரையில் மத நல்லிணக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை
9 Dec 2025, 4:25 pm
<p><strong>மதுரையில் மத நல்லிணக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கோரிக்கை</strong></p>
<p>மதுரை, டிச. 9 – உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி, மதுரையில் மத நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் மத நல்லிணக்கத்தை உறுதிப் படுத்தும் வகையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கல்யாணசுந்தரம் ஆகியோர் வழங்கிய மேன்முறையீட்டு மனு எண்கள்.1442, 1524/2014 தொடர்பான தீர்ப்பு களை தமிழக அரசு முழுமையாக நடை முறைப்படுத்த வேண்டும். மேலும், சமூக நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சமூக நல்லிணக்கப் போராளிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களுமான திருமாவளவன் மற்றும் சு. வெங்கடேசன் ஆகியோரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் பேசிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பு வழக்கறி ஞர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், முத்து அமுதநாதன், பசும்பொன் பாண்டியன் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள், சட்டத்தின் அடிப்படையில் மத நல்லிணக்கத்தை பாது காக்க வேண்டிய அரசின் கடமையை சுட்டிக் காட்டினர். மதுரை போன்ற பாரம்பரியமாக சமூக ஒற்றுமையை பேணிக் கொண்டுவரும் நகரில், சட்டத்தை மதித்து, உயர்நீதிமன்ற தீர்ப்புகளை செயல்படுத்துவதன் மூலம் அமைதியும் நல்லிணக்கமும் நிலைநிறுத்தப் பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.</p>
