முந்தய பக்கம்

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், நேர்மையும் திறமையும் கொண்ட நீதிபதிகள் வெளிப்படையான

16 Jul 2026, 11:52 pm
நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க  வலியுறுத்தியும், நேர்மையும் திறமையும் கொண்ட நீதிபதிகள் வெளிப்படையான
<p>நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், நேர்மையும் திறமையும் கொண்ட நீதிபதிகள் வெளிப்படையான முறையில் நியமிக்க கோரியும் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் விருத்தாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மூத்த வழக்குரைஞர் பூமாலை குமாரசாமி தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் சங்கரய்யா, குமரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர்கள் பெரியார், செந்தில் வீரப்பன், ராஜ்மோகன், அப்துல்லா, மணிகண்டன், பேரருள், ஆனந்த ஜோதி, ஜென்னி இனியவள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram