கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கும்பகோணம், பிப்.20- தமிழக அரசு கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு கும்பகோணம் மாவட்டம் அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தஞ்சை மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்ட கும்பகோணம், தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதனால் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மாவட்டத்திற்கு தனியாக இயங்கும் வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். சங்க துணைச் செயலாளர் ஐயப்பன், வழக்கறிஞர்கள் கென்னடி, கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
