இ - பைல்லிங் நடைமுறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
2 Dec 2025, 4:11 pm
<p><strong>இ - பைல்லிங் நடைமுறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>பொள்ளாச்சி, டிச.2- நீதிமன்றங்களில் இ- பைலிங் முறையை நடை முறைப்படுத்துவதை கண்டித்து பொள்ளாச்சியில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கீழமை நீதி மன்றங்களில் வழக்குகளை பதிவு செய்ய இ-பைல்லிங் எனப்படும் மின் தாக்கல் முறையை நடைமுறைப்படுத்தப் படுகிறது. கீழமை நீதிமன்றங்களில் எந்த ஒரு கட்டமைப்பு வச தியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இ- பைல் லிங் முறையை நடைமுறைப்படுத்துவதால் வழக்குகள் பாதிக்கப்படுகிறது. எனவே, டிச.1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தமிழக முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்க ளில் பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டங் களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கறி ஞர்கள் செவ்வாயன்று பணிகளை புறக்கணித்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதேபோன்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
