பார் கவுன்சில் தலைவர் மீது நடவடிக்கை கோரி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!
21 Aug 2026, 9:32 pm

பார் கவுன்சில் தலைவர் மீது நடவடிக்கை கோரி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்!

சென்னை, ஆக. 21 -இந்திய பார் கவுன்சில்தலைவர் மனன் குமார்மிஸ்ராவின் தன்னிச்சையான மற்றும் ஜனநாயகமற்ற செயல்பாடுகளைக் கண்டித்தும், அவர் பதவியிலிருந்து விலகக் கோரியும் வழக்கறிஞர்கள் வெள்ளியன்று (ஆக. 21) நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய பார் கவுன்சில் என்பது வழக்கறிஞர்கள் சட்டம், 1961-இன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ மற்றும்சுயேச்சையாகசெயல்படும் அமைப்பாகும்.ஆனால், அதன் தலைவர் நீண்ட காலமாக அந்தப் பதவியில் நீடிப்பதும், அரசியல் சார்ந்த கருத்துக்களை பார் கவுன்சில் தலைவர் என்ற பதவியில் இருந்து வெளியிடுவதும், மாணவர் போராட்டங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகளை எடுப்பதும், மாநில பார் கவுன்சில்களின் ஜனநாயகசுயாட்சியில் தலையிடுவதும் பார் கவுன்சிலின் சுயேச்சையான மற்றும் ஜனநாயகத் தன்மை குறித்து தீவிரமான கேள்விகளைஎழுப்புகின்றன.

குறிப்பாக, நால்சர் சட்டப்பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான விவகாரத்தில், 2026-ஆம் ஆண்டு சட்டம் முடித்த பட்டதாரிகள் அனைவரையும் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யக்கூடாது என மாநில பார் கவுன்சில்களுக்கு மனன் குமார் உத்தரவிட்டார். இது மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமல்லாமல், தனிப்பட்ட மாணவர்களின் கருத்துவேறுபாட்டிற்காக ஒட்டுமொத்த மாணவர் குழுவையும் பாதிக்கும் கூட்டுத் தண்டனை நடவடிக்கையாக அவரது தன்னிச்சையான உத்தரவு அமைந்தது. இதுதொடர்பாக நாடு முழுவதும் எழுந்த கண்டனக் குரலைத் தொடர்ந்து அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.இவ்வாறு, இந்திய பார் கவுன்சிலின் கண்ணியம், சுயாதீனம் மற்றும் ஜனநாயகத் தன்மையைப் பாதுகாக்க மனன் குமார் மிஸ்ரா இந்திய பார் கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU) நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

சென்னை

அதனடிப்படையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆவேச ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் பி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொறுப்பா ளர் சீனு வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலத் துணைத்தலைவர்கள் க. இளங்கோ, ஜி.சம்கிராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் ச. சிவக்குமார், ஆகியோர் கண்டன உரையாற்றி னர்.

மதுரை

அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் (ஏஐஎல்யு) சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்புநடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்க தேசியக் குழு உறுப்பினர் சாஜி செல்லான் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் விஜி முருகன், உயர்நீதிமன்றக் கிளை நிர்வாகிகள் சீனிவாசராகவன், மோகன் காந்தி, பாரதி, வாமனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.ஜே. பாத்திமா நன்றி கூறினார்.தோழமை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.