இ பைலிங் முறைக்கு எதிராக தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம் நீதித்துறை பணிகளில் தொய்வு; வழக்குகள் தேக்கம் அதிகரிப்பு
6 Jan 2026, 4:23 pm
<p><strong>இ பைலிங் முறைக்கு எதிராக தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம் நீதித்துறை பணிகளில் தொய்வு; வழக்குகள் தேக்கம் அதிகரிப்பு</strong></p>
<p>திருப்பூர், ஜன. 6 - நீதிமன்றங்களில் கட்டாய இ பைலிங் முறைக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத னால் நீதிமன்றப் பணிகளில் தொய்வு ஏற்பட்டி ருப்பதுடன், வழக்குகள் தேக்கமும் அதிக ரித்து, வழக்கறிஞர்களுக்கு மட்டுமின்றி வழக் காடிகளுக்கும் பல்வேறு விதமான பாதிப்பு கள் ஏற்பட்டிருப்பதாக வழக்கறிஞர்கள் தெரி வித்தனர். டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை இ பைலிங் எனப்படும் மின்னணு முறையில் பதி வேற்றம் செய்வது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இ பைலிங் செய்வதற்கு உரிய கட்டமைப்பு வசதி, வழக்கறிஞர்கள், ஊழியர்களுக்கு உரிய பயிற்சி ஏற்பாடுகள் இல்லாமல் இ பைலிங் முறையை கட்டாயப்படுத்துவ தற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்புத் தெரி வித்துள்ளனர். நீதித்துறையில் இ பைலிங் முறை நடைமு றைக்கு வருவது நவீன கால மாற்றத்திற்கு ஏற்ப விரைவாக செயல்படுவதற்கு தேவை தான், வரவேற்க வேண்டிய நல்ல விசயம் தான் எனச் சொல்லும் வழக்கறிஞர்கள் அதை உடனடியாகக் கட்டாயப்படுத்து வதைத்தான் எதிர்க்கிறோம் என்று தெரிவித்த னர். குறிப்பாக இ பைலிங் முறைக்கு தற் போது அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் பல் வேறு கீழமை நீதிமன்றங்களில் இல்லாததா லும், மையப்படுத்தப்பட்ட சர்வர் வசதி, ஆவணங்களை ஸ்கேனிங் செய்வதற்கான வசதிகள் போதுமான அளவு இல்லாததா லும், அதற்கான தொழில்நுட்ப கருவிகளை வாங்க குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம் என வழக்கறிஞர்கள் செலவிட வேண் டிய கட்டாயம் இருப்பதாலும், தனியார் கடை களில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதாலும், உடனடியாக அனைவ ரும் இ பைலிங் முறைக்கு மாறுவது சாத்திய மில்லை. மேலும் வேகமான, சீரான இணைய தள இணைப்புக் கிடைக்காமல் நெருக்கடி யில் சிக்கும் நிலையும் உள்ளது. இத்தகைய நிலையில் இ பைலிங்கை கட்டாயப்படுத்து வது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இ பைலிங் முறையில் ஆவணங் களை தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கும் அதே சமயம், நேரடி ஆவணங்களை தாக் கல் செய்யும் முறையையும் அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 5ஆம் தேதியில் இருந்து நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பலவிதமான போராட்டங்களை வழக்கறி ஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒரு மாத காலமாக வழக்கறிஞர்கள் போராட் டம் நடத்தி வரும் நிலையில் திருப்பூர் மாவட் டத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் 3000க்கும் மேற் பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகின்ற னர். அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்க ளும் இ பைலிங் கட்டாயப்படுத்தலுக்கு எதி ராக போராடி வருகின்றனர். வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டிருக்கும் நிலையில் நீதிமன்றங்களில் ஜாமீன் மனு தாக்கல் செய்வது பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விசாரணைக் கைதிகள் குறிப் பிட்ட காலத்திற்கு மேலும் கூடுதலாக சிறை யில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. பல வழக்குகளில் வாய்தா வாங்கி தள்ளி வைக்கப்படுகிறது. குற்ற வழக்குகளில் சாட்சி கள் விசாரணை தள்ளிப் போகிறது. சில சம யங்களில் விசாரணை நடைபெறாமலேயே தீர்ப்பு வழங்கும் சூழலும் உள்ளது. காசோலை மோசடி வழக்குகளைப் பொறுத்த வரை குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இது போன்ற வழக்குகளில் கால நிர்ணயம் கடந்துவிட்டால் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. பொதுவாக வழக்குக்கு எண்ணிடு வது, விசாரணை, தீர்ப்பளிப்பது என அனைத்து வகையிலும் தற்போது நீதிமன்றப் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். கேரளாவில் இ பைலிங் முறைக்கு நல்ல கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேறு சில மாநிலங்களில் இ பைலிங் முறை யுடன், நேரடி ஆவணங்கள் தாக்கல் செய்யும் முறையும் அனுமதிக்கப்படுகிறது. காலப் போக்கில் இ பைலிங் முறைதான் முழுமை யாக வரப் போகிறது. அதற்குரிய கட்டமைப் பும், பயிற்சியும் தான் தற்போது பிரச்சனை யாக உள்ளது. இதை செய்வதற்கு உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும். தற்போ தைய பணி பாதிப்பால் வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, சாமா னிய வழக்காடிகள் பெருமளவு பாதிக்கப்படு கின்றனர். எனவே சென்னை உயர்நீதிமன்றம் இப்பிரச்சனையில் சரியான நிலைபாட்டை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்ப தாக திருப்பூர் வழக்கறிஞர்கள் தெரிவித்த னர்.</p>
