ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி வழக்கறிஞர்கள் உண்ணாநிலை
14 Nov 2025, 1:26 pm
<p><strong>ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி வழக்கறிஞர்கள் உண்ணாநிலை</strong></p>
<p>தருமபுரி, நவ.14- ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டி டம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாப்பி ரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் சங் கத்தினர் உண்ணாநிலையில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டியில் வாடகை கட்டிடத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன் றம், குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றம் இயங்கி வருகி றது. இந்நிலையில், கழிப்பறை வசதிகள் இல்லாததாலும், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டி டத்திற்கு பதிலாக இப்பகுதிக்கு மூன்று நீதிமன்றங்களை உள்ள டக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் வேண்டுமென்று வழக்கறி ஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி வட் டாட்சியர் அலுவலகம் அருகில் ஐந் தரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய் யப்பட்டு, ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசிற்கு தரவுகள் அனுப் பப்பட்டிருந்தன. ஒரு வருட காலத் திற்கு மேலாகியும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடி யிருப்பு கட்டுவதற்கான நிதி ஒதுக் கீடு செய்யாமல் உள்ளது. இந்நிலை யில், பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறி ஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற கட்டி டம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என வலியு றுத்தி பாப்பிரெட்டிப்பட்டியில் தொடர் உண்ணாநிலை போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கத் தின் தலைவர் கோபி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தி.வ. தனுஷன், விவசாயிகள் சங்க தலை வர் தீர்த்தகிரி, மாதர் சங்க வட்டச் செயலாளர் கிருஷ்ணவேணி, பழங் குடி மக்கள் சங்கத் தலைவர் சொக்க லிங்கம், வாலிபர் சங்க வட்டத் தலை வர் குப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.<br />
</p>
