முந்தய பக்கம்

வழக்கறிஞர்கள் இலக்கிய வட்டம் தொடக்கம்

12 Mar 2026, 4:20 pm
வழக்கறிஞர்கள் இலக்கிய வட்டம் தொடக்கம்
<p><strong>வழக்கறிஞர்கள் இலக்கிய வட்டம் தொடக்கம்</strong></p> <p>திருப்பூர், மார்ச் 12 &ndash; திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இலக் கிய வட்ட தொடக்க விழா செவ்வாயன்று நடைபெற்றது. கூடுதல் மாவட்ட நீதிமன்ற எண் 2 அரசு வழக்கறிஞர் கே. பூமதி தலைமை ஏற்றார். திருப்பூர் பார் அசோசியேஷன் தலை வர் ஏ.பாலகுமார், திருப்பூர் அட்வகேட்ஸ் அசோசியேஷன் தலைவர் ஆர்.ராமசாமி, திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் ஒ.உதயசூரியன் ஆகியோர் முன்னி லையில், முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி என். குணசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றி னார். சிறப்பு மாவட்ட மோட்டார் வாகன இழப்பீட்டு தீர்ப்பாய &nbsp;நீதிபதி டி.பாலு வாழ்த்திப் பேசினார். முன்னதாக வழக்கறிஞர் &nbsp;ஜி.அருண் கிருஷ்ணன் வரவேற்றார். இந்த இலக்கிய வட்ட தொடக்க விழாவில் இலக்கி யங்கள் வாழ்வில் இன்புற்று மகிழவா? பின்பற்றி வாழவா? எனும் தலைப்பில் மூத்த வழக்கறிஞர் ஜா.நாராயணசாமி நடு வராக கொண்ட பட்டிமன்றம் நடைபெற்றது. வழக்கறி ஞர்கள் பி.திங்களவள், எஸ்.சரவணக்குமார், ஏ.அந்தோணி ஷெர்லின் மற்றும் எஸ்.ஏ.தமயந்தி, எஸ்.வினோத்குமார், எஸ். ஸ்ரீநிதி ஆகியோர் வழக்காடினர். வழக்கறிஞர்கள் எஸ்.ஏ.சுப்புராஜூ, தமிழ் கார்க்கி, ஏ.டி. பூர்ணிமா தபு உள்பட ஏராளமான வழக்கறி ஞர்கள் பங்கேற்றனர். முடிவில் வழக்கறிஞர் ஆ.அமர்நாத் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram