இஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு: வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
9 Dec 2025, 4:25 pm
<p><strong>இஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு: வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்</strong></p>
<p>கோவை, டிச.9- இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரி வித்து மாநிலம் முழுவதும் வழக்கறி ஞர்கள் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை அமல்படுத்தப்படுவதுவதை கண்டித்து செவ்வாயன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோயம்புத்தூர் வழக்கறிஞர் கள் சங்கத்தினர் உண்ணாவிரத இயக் கத்தில் ஈடுபட்டனர். கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் பால கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்க ளின் கூட்டுக்குழு தலை வர் பி.நந்தகுமார், பார் கவுன்சில் துணைத்தலை வர் அருணாச்சலம், கோயம்புத்தூர் வழக்கறி ஞர் சங்க செயலாளர் சுதீஷ், குற்றவியல் வழக் கறிகள் சங்க தலைவர் மருதுபாண்டியன், அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநிலப் பொருளாளர் மாசேதுங், மாநிலக் குழு உறுப்பினர் கோபால்சங்கர், மாவட்டச் செயலாளர் ஜோதிக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக் கணித்து, நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபு ரம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செய லாளர் ஆர்.கே.டி. தங்கதுரை தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில், வழக் கறிஞர்கள் வாசுதேவன், சிவக்குமார், சுந் தரம், செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
