திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
28 Nov 2025, 2:28 pm
<p><strong>திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்</strong></p>
<p>திருவில்லிபுத்தூர்,நவ. 28- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களி லும் இபைலிங் செய்வதற் கான அடிப்படை கட்டமை ப்புகளை மேம்படுத்தாமல் 01.12.2025 தேதி முதல் இபை லிங் முறையை கட்டாய மாக்குவதாக அறிவித்துள்ள அறிவிப்பினை உடனடியாக சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க கோரியும் வழக்கறிஞர் சேமநல நிதி யினை ரூபாய் 10 லட்சத்தி லிருந்து, ரூபாய் 25 லட்ச மாக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டுமென கோரியும், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பணிகள் புறக்கணிப்பு மற்றும் நீதி மன்ற நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு வழக்க றிஞர் சங்கத்தின் தலைவர் ராசையா தலைமை தாங்கி னார். கோரிக்கைகளை விள க்கி சங்கத்தின் செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.இதேபோல் ராஜபாளையம் வத்திராயிருப்பு நீதிமன்றம் முன்பும் போராட்டம் நடை பெற்றது.</p>
