முந்தய பக்கம்

மாவட்ட வாரியாக மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்க வழக்கறிஞர்கள் மாநாடு வலியுறுத்தல்

24 Jan 2026, 3:38 pm
மாவட்ட வாரியாக மனித உரிமை நீதிமன்றங்கள்  அமைக்க வழக்கறிஞர்கள் மாநாடு வலியுறுத்தல்
<p><strong>மாவட்ட வாரியாக மனித உரிமை நீதிமன்றங்கள் &nbsp;அமைக்க வழக்கறிஞர்கள் மாநாடு வலியுறுத்தல்</strong></p> <p>திருவண்ணாமலை, ஜன. 24- அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 2வது மாநாடு வேங்கிக்காலில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் எஸ். அபி ராமன் தலைமை தாங்கினார். சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி டி. ஹரி பரந்தாமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கருத்துரையாற்றினர். மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாகத் தனியாக மனித உரிமை நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.திரு வண்ணாமலையில் அரசுச் சட்டக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும்.கட்டாய &#39;ஈ-பைலிங்&#39; முறையைக் கைவிட வேண்டும். நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் &nbsp;உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. &nbsp;நிர்வாகிகள் தேர்வு தலைவராக எம்.ஜெயபாலன், செயலாளராக பி. நாகராஜன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram