முந்தய பக்கம்

போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் வாக்குச்சாவடி அமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்

28 Mar 2026, 4:13 pm
போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் வாக்குச்சாவடி அமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்

போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் வாக்குச்சாவடி அமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி, மார்ச் 28-  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் வரும் மார்ச் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுவாக, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தலுக்கு அந்தந்தப் பகுதிகளிலேயே வாக்குச்சாவடி அமைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை போச்சம்பள்ளி நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு ஊத்தங்கரையில் வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போச்சம்பள்ளி நீதிமன்ற வளாகத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க வலியுறுத்தி 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram