வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கோவை, டிச.17- இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறி ஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டங்க ளில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் போதிய ஊழியர்கள் உள்ளிட்ட கட்ட மைப்புகளை ஏற்படுத்தாமல் இ-பைலிங் முறையை அமல்ப டுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்க றிஞர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ஜேக் அமைப்பினர் இணைந்து இ-பைலிங் முறையை நிறுத்தக் கோரி, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு, வாயில் கருப்புத்துணியை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சேலம் இதேபோன்று, நீதிமன்ற பணிகளை புறக்கணித்து சேலம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தனர் சேலம் மாவட்ட நீதிமன்றம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சங்க தலைவர் இமயவர்மன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.</p>
