சென்னை விரைவு செய்திகள்
3 Mar 2026, 3:38 pm

2 கார்கள் மோதி விபத்து சட்டக்கல்லூரி மாணவி பலி

சென்னை, மார்ச்.3- சென்னை அண்ணா பல்கலைக்கழகம் எதிரே முன்னால் சென்ற காரை முந்தி செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் சட்டக்கல்லூரி மாணவி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். கேரளம் மாநிலத்தை சேர்ந்தவர் ஜூனு (21). இவர் விடுதியில் தங்கி சென்னை பெருங்குடியில் உள்ள சட்டக்கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் திங்களன்று இரவு தன்னுடன் படிக்கும் சக மாணவி ஊட்டியை சேர்ந்த பிரியா (21), சக மாணவர்கள் கரூரை சேர்ந்த அப்ரருல் ஆர்த்திப் (21), கோவையை சேர்ந்த ஜெகதீப் (22) ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளனர். பின்னர் 4 பேரும் ஒரே காரில் செவ்வாயன்று அதிகாலை 3 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் இருந்து தரமணி நோக்கி சென்று கொண்டி ருந்தனர். காரை அப்ரருல் ஆர்த்திப் ஓட்டி சென்றார். கார் காந்தி மண்டபம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் கேட் அருகே வரும் போது, முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென வலது புறம் திரும்பி யுள்ளது. அப்போது மாணவர்கள் வந்த கார் முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி ஜூனு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3 பேரும் காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் முன்னால் சென்ற கார் ஓட்டுநர் கடலூரை சேர்ந்த வெங்கடேசன் (33) காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீயில் கருகிய இயற்கை வளங்கள்

திருவண்ணாமலை,மார்ச்3- திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் உள்ள புனல்காடு பகுதியில் புதி தாக குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. திரு வண்ணாமலை நகரத்தில் சேகரமாகும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வரு கிறது. இங்கு குப்பை கிடந்து அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் செவ்வாய் அன்று (மார்ச்3) மாலை புனல்காடு மலை மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மலையை சுற்றி தீ பரவியதால் அரிய வகை தாவரங்கள் தீயில் கருகியது. வன உயிரி னங்கள் உயிரிழந்தது.

தங்கம் விலை நிலவரம்

சென்னை, மார்ச் 3- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650-க்கும், ஒரு சவ ரன் ரூ.80 சரிந்து ரூ.1,25, 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.17,073 விறப னையானது.

பிராட்வே பேருந்து நிலைய மாற்றத்தால் வர்த்தகம் பாதிப்பு பழைய வழித்தடங்களில் இயக்க வியாபாரிகள் கோரிக்கை

சென்னை, மார்ச் 3- சென்னை மாநகரின் இதயமாகவும், பாரம்பரிய வணிக மையமாகவும் விளங்கும் என்.எஸ்.சி போஸ் சாலை, பூக்கடை மற்றும் ரட்டன் பஜார் பகுதி களில் பேருந்து வழித்தடங்கள் மாற்றப்பட்ட தால் பொதுமக்கள் மற்றும் சிறு குறு வணி கர்கள் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். இது குறித்து சென்னை நகர சிறு வியாபாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எம். அபுதாகீர் பழைய வழித்தடங்களை மீட்டு சீரமைக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பிராட்வே பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் காரணமாக, கடந்த ஜனவரி 24-ஆம் தேதி முதல் பேருந்து நிறுத்தங்கள் ராயபுரம் மற்றும் தீவுத்திடல் பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. அரசின் இந்த விரிவாக்கத் திட்டத்தை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள சங்கம், இந்தப் பணிகள் நிறைவடைய இன்னும் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என்பதால், அதுவரை மாற்று ஏற்பாடுகள் செய்வது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக கோயம்பேடு, சைதாப்பேட்டை, வேளச்சேரி, கிளாம்பாக்கம், கோவளம் மற்றும் மயிலாப்பூர் செல்லும் பேருந்து களில் சில முக்கியமான வழித்தடங்களை மீண்டும் பழைய பிராட்வே மற்றும் என்.எஸ்.சி போஸ் சாலை வழியாக இயக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதேபோல் வடசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மணலி, தண்டையார் பேட்டை, நேதாஜி நகர், வியாசர்பாடி, மூலக்கடை, சர்மா நகர், புழல், செங்குன்றம், பெரம்பூர், அண்ணா நகர், ஆவடி மற்றும் பட்டாபிராம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளில் சிலவற்றை பழைய நடைமுறைப்படியே இயக்க ஆவண செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம், புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவில், கந்தசாமி கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தங்கம், வெள்ளி, மளிகை, எலக்ட்ரிக் பொருட்கள் போன்ற மொத்த விற்பனை அங்காடிகள் நிறைந்த இந்தப் பாரம்பரியப் பகுதிக்குத் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பேருந்து வசதி குறைந்ததால் வணிக நிறுவனங்கள் முடங்கி அரசுக்கும் பொதுமக்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களின் நியாயமான கோரிக்கையையும், இந்தப் பகுதியின் வணிக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு அரசு உடனடியாகப் போக்குவரத்து வழித்தடங்களைச் சீரமைக்க வேண்டும் என்று எம். அபுதாகீர் கேட்டுக்கொண்டுள்ளார்.