விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் மனு
28 Jan 2026, 2:33 pm
<p><strong>விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் மனு</strong></p>
<p>கோவை, ஜன.28- தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி கோவை சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி இறுதியாண்டு பயின்று வரும் மாணவர்கள் ஆட்சியரி டம் மனு அளித்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் “உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு விலை யில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதில், சட்டக்கல்லூரியில் 5 ஆண்டுகள் படிக்கும் மாணவர்க ளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், 3 ஆண்டு கள் எல்.எல்.பி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட வில்லை. இந்நிலையில் தங்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டக்கல்லூரி எல்.எல்.பி இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் கூடினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சி யரை இரண்டாவது முறையாக சந்தித்து மனு அளித்த னர். இதுகுறித்து பேசிய மாணவர்கள் கூறும்போது, ஏற் கனவே இளநிலை கல்வியை, முடித்துவிட்டு வரும் நாங்கள் சட்டக் கல்லூரியில் மூன்றாண்டுகள் படிக்கும் எல்.எல்.பி படிப்பில் சேர்ந்துள்ளோம். இதுவும் இள நிலை கல்வியில்தான் சேர்கிறது. இந்த ஆண்டு விலை யில்லா மடிக்கணினி ஐந்து ஆண்டுகள் படிக்கும் மாண வர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. தங்களுக் கும், தமிழக அரசின் மடிக்கணினியை வழங்க வேண் டும். இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.</p>
