மக்கள் நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு
22 Feb 2026, 3:26 pm
<p><strong>மக்கள் நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு</strong></p>
<p>கோவை, பிப்.22- கோவையில் ரூ.3.13 கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்களை கணபதி ராஜ்குமார் எம்.பி., திறந்து வைத்தார். கோவை மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் மத்திய மண்டலப் பகுதிகளில் சுமார் ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் நிறைவுற்ற பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கண பதி ப.ராஜ்குமார் சனியன்று திறந்து வைத்தார். அதன் படி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட, இராமநாதபுரம் நாகப்பதேவர் வீதியில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் புனர மைக்கப்பட்ட மாநகராட்சி திருமண மண்டபம், கோட்டைமேடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 புதிய வகுப் பறைகள், செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி யில் ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறைகளை ராஜ்குமார் எம்.பி., திறந்து வைத் தார். தொடர்ந்து, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட ஆசிரி யர் காலனியில் ரூ.34.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வார்டு அலுவலகத்தை திறந்து வைத்த அவர், அதே பகுதியில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய நூலக கட்டிடப் பணிக்கு அடிக்கல் நாட்டி னார். இந்நிகழ்வுகளில் மாநகராட்சி மேயர் க.ரங்க நாயகி, மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபா கரன், மாநகரத் தலைமைப் பொறியாளர் விஜயகுமார், வடக்கு மண்டலத் தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற நிலைக்குழு தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
