லத்தேரி சுடுகாட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் சிபிஎம் தலையீட்டால் அளவீடு நிறைவு
27 May 2026, 12:34 am
<p><strong>லத்தேரி சுடுகாட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் சிபிஎம் தலையீட்டால் அளவீடு நிறைவு</strong></p><p>வேலூர், மே 26 - லத்தேரி இந்திரா நகர் சுடுகாட்டு இடத்தை ஆக்கிரமித்திருந்த விவசாயி விலக்கப்பட்டு, சிபிஎம் தலையீட்டின் பேரில் காவல்துறை பாதுகாப்புடன் அரசு அளவீடு நடத்தப்பட்டு கல் நடப்பட்டது. கே.வி.குப்பம் வட்டம் லத்தேரி ஊராட்சி இந்திரா நகரில் 75க்கும் மேற்பட்ட ஆதி திராவிட அருந்ததியர் குடும்பங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் சுடு காட்டிற்கு சுற்றுச்சுவர் மற்றும் எரிமேடை அமைக்க கோரி சிபிஎம் கிளை செயலாளர் எல்.எம்.சுப்பிரமணியன் கடந்த மார்ச் மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தி ருந்தார். எனினும் அருகில் விவசாயம் செய்யும் ஒருவர் சுடுகாட்டு இடத்தை ஆக்கிர மித்து, அளவீட்டிற்கு வந்த அலுவலர்களை யும் தடுத்தார். இதையடுத்து சிபிஎம் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க, தலைமை நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் பி.காத்தவராயன், மாவட்ட செயலாளர் வி.குபேந்திரன், வாலிபர் சங்க தாலுகா செயலாளர் லோ.நவீன், பெரு மாள் (அஞ்சல் ஓய்வு) உள்ளிட்டோர் காவல்துறை பாதுகாப்புடன் இடத்திற்கு சென்றனர். அரசுக்கு சொந்தமான சுடுகாட்டு இடம் அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டது. தொடர்ந்து சிபிஎம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலு வலரிடம் எரிமேடை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை வைக்கப்பட, அவர்களும் விரைந்து நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.</p>
