உதகையில் புத்தாண்டு: அதிகளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
1 Jan 2026, 4:14 pm

உதகை, ஜன.1- புத்தாண்டை கொண்டாட சுற்று லாப் பயணிகள் அதிகளவில் திரண்ட தால், உதகை நகரில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தல மான உதகையில் ஆங்கிலப் புத் தாண்டு கொண்டாட்டம் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக உற் சாகம், கோலாகலத்துடன் கொண்டா டப்பட்டது. உதகையிலுள்ள பல் வேறு தங்குமிடங்கள் மற்றும் சுற் றுலா விடுதிகளில் புத்தாண்டை முன் னிட்டு இசை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்துகள், பாரம்பரிய நவீன கலாச் சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட கொண் டாட்டங்கள் களைகட்டின. சுற்றுலாப் பயணிகள் இசை, ஆடல், பாடலுடன் ஆங்கில புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். தொடர் விடுமு றையையொட்டி கடந்த ஒரு வார மாகவே உதகைக்கு சுற்றுலாப் பய ணிகளின் வருகை கணிசமாக அதிக ரித்து காணப்பட்டது. இதனால் உதகை முழுவதும் சுற்றுலாப் பயணி களின் கூட்டம் அலைமோதியது. தனி யார் ஓட்டல்கள் மற்றும் அரசின் ‘ஓட் டல் தமிழ்நாடு’ அரங்கிலும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் ஏராள மான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அவர்கள் இயற்கை அழகை கண்டு ரசித்தபடி புகைப் படங்கள் எடுத்துக் கொண்டும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழு துபோக்கியும் புத்தாண்டை மகிழ்ச்சி யுடன் கொண்டாடினர்.

அதிலும், குறிப்பாக கேரளம், கர்நாடகா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகளவில் காணப்பட்டது. இத னால் உதகை, குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் புத்தாண்டுக்கு முன்பா கவே முழுமையாக முன்பதிவு செய் யப்பட்டு, அறைகள் நிரம்பி வழிந் தன. தங்குமிடம் கிடைக்காத சுற்று லாப் பயணிகள் மேட்டுப்பாளையம் விடுதிகளில் தங்கி, அங்கிருந்து சுற் றுலா வாகனங்கள் மூலம் குன்னூர், உதகைக்கு சென்று அங்குள்ள சுற் றுலாத் தலங்களில் குவிந்து புத் தாண்டை கொண்டாடினர். நீலகி ரிக்கு வரும் சிறப்பு மலை ரயில்களி லும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்திருந்தனர். இதன்காரணமாக குன்னூர் முதல் உதகை வரையி லான ரயில் நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளால் களைகட்டின. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள தால், அங்குள்ள வியாபாரக்கடைகள், உணவகங்கள் மற்றும் நினைவுப் பரிசு கடைகளில் விற்பனை சூடு பிடித்தது. இதனால் அங்கு சுற்று லாவை சார்ந்து செயல்படும் வணி கர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குன் னூரில் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், லேம்ஸ்ராக்,காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் புத்தாண்டையொட்டி பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப் பட்டது. இதன்காரணமாக குன்னூர்-கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் நகர-கிராமப்பகுதிகளுக்கு செல் லும் சாலைகளில் சுமார் 3 கி.மீ. தொலைவிற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் உள்ளூர் மக்கள் தங்களின் அன்றாடப் பணி களை மேற்கொள்ள இயலாமல் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிக ளில் குன்னூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை பூங்கா மற்றும் கவியருவி யில் ஆங்கில புத்தாண்டு விடுமு றையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத் துடன் வருகை புரிந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இதேபோன்று வால்பாறை, கோவை குற்றாலம், ஆனைக்கட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்த னர்.