தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: இன்று முதல்வர் வழங்குகிறார்

4 Jan 2026, 4:05 pm
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: இன்று முதல்வர் வழங்குகிறார்
<p><strong>கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: இன்று முதல்வர் வழங்குகிறார்</strong></p> <p>சென்னை, ஜன.4 - கல்லூரி மாணவர்களின் திறன் &nbsp;வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற் றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினி கள் வழங்கும் &ldquo;உலகம் உங்கள் கையில்&rdquo; என்னும் திட்டத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திங்கட் கிழமை (ஜன.5) மாலை 3 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் தொடக்கி வைக கிறார். மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற &ldquo;உலகம் உங்கள் கை யில்&rdquo; என்னும் அறிவூட்டும் கருப்பொ ருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர்க்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் &nbsp;செயல்படுத்தப்படும் என முதல மைச்சர் அறிவித்தார். இத்திட்டம் &nbsp;மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங் களாக நிறைவேற்றப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அரசு பொறியி யல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, &nbsp;தொழில்துறைப் பயிற்சி போன்ற &nbsp;அனைத்துத் துறைகள் சார்ந்த மாண வர்களுக்கும் 10 லட்சம் &nbsp;மடிக்கணினிகள் வழங்கப்படு கின்றன. தொழில்நுட்ப அறிவியலை வலுப் படுத்த Dell, Acer, HP போன்ற &nbsp;உலகத் தரமான நிறுவனங்களின் &nbsp;மடிக்கணினிகள் வழங்கப்படு கின்றன. &nbsp;மாணவர்களுக்கு வழங்கப் படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 அல்லது AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD &nbsp;நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS &nbsp;ஆகிய மென்பொருள்கள் முன்ன தாக நிறுவப்பட்டுள்ளன. நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS &nbsp;Office 365, மேலும் &ldquo;அறிவைத் &nbsp;தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்&rdquo; என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொரு ளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. &nbsp;ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.