கலைமகள் கல்லூரியில் மடிக்கணினி வழங்கல்
8 Feb 2026, 3:55 pm
<p><strong>கலைமகள் கல்லூரியில் மடிக்கணினி வழங்கல்</strong></p>
<p>மயிலாடுதுறை, பிப்.8 - மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் அருகேயுள்ள காளகஸ்தினாத புரத்தில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் விலையில்லா மடிக் கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வி நெடுஞ்செழி யன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவ லர் செந்தில்குமார், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், ஒன்றியச் செயலா ளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வினோத் வரவேற்றார். இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் 135 மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி பேசினார். விழாவில் பேரூர் செயலா ளர் முத்துராஜா, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சரவணன், விஸ்வநாதன், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள் கபிலன், வின்சன்ட் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள், திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். கல்லூரி பேரா சிரியர் நேதாஜி நன்றி கூறினார்.</p>
