மடிக்கணினியும் மணிக்குட்டியும் - சோ.முத்துமாணிக்கம்
30 May 2026, 10:54 pm

மடிக்கணினியும் மணிக்குட்டியும் - சோ.முத்துமாணிக்கம்

டுமீல்..டுமீல்..விடமாட்டேண்டா..ஏங்கிட்ட உன் பாச்சா பலிக்காதுடா...இனியன் முகத்தைப் பார்க்கவே அச்சமாக இருந் தது.

முன்னால் ஒருவன் ஓடிக்கொண்டே இருந்தான். அவனைக் கொல்வதற்காக இனியனும் கையில் துப்பாக்கியுடன் வளைந்து வளைந்து ஓடிக்கொண்டிருந்தான். நெருங்கி விட்டான். டப்.டப்.டப்.டப் .. மிய்யாவ்..எ

ன்று அலறி விழுந்தது மணிக்குட்டி. இனியனுக்குஇப்போதுதான் இவ்வுலக நினைவு வந்தது.

மடிக்கணி னியின் விசைப்பலகையில் இருந்து விரல் களை விலக்கினான். அவன் காலையே சுற்றிக் கொண்டு விளையாடிக் கொண்டி ருக்கும் பூனையின் கூக்குரல் கேட்டு, ‘போடா மணிக்குட்டி அந்தப்பக்கம் ‘ என்று விரட்டினான்.

கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே படிப்பதற் காக மழலையர் வகுப்பிலிருந்தே எல்லா மாணவர்களுக்கும் வலிய வலியக் கணிப் பொறியைத் திணித்ததன் விளைவு இவ்வ ளவு மோசமாகப் போகும் என்று எவரும் நினைக்கவில்லை.

விளையும் பயிர்களைக் கசக்கி விட்டு விளைச்சலைக் குறைசொல்லி என்ன பயன் ? பத்தாம் வகுப்பில் படிக்கும் இனியனுக் குப் பாடங்களைப் படிப்பதை விடக் கணினி யில் பலவகை விளையாட்டுகளை விளை யாடத்தான் ஆசை.

முன்பெல்லாம் வகுப்பி லேயே வீட்டுப் பாடங்களை எழுதுவதற் கான வினாக்களைக் கரும்பலகையில் எழுதிப் போடுவார் ஆசிரியர்.

இப்போது காலம் மாறிவிட்டது.

அரசுப் பள்ளிகள் பரவாயில்லை. தனி யார் பள்ளிகள் மாணவர்களுக்கு விடுக் கும் அறிவிப்புகள், வீட்டுப்பாடங்களுக்குத் தரும் வினாக்கள், பெற்றோர்க்குத் தெரி வக்க வேண்டிய செய்திகள் அனைத்துமே காணொலி மூலம்தான்.

பாவம் அவர்கள் தான் என்ன செய்வார்கள் ? கங்காணி கூலியக் குறைத்தால் வேலைக்காரர் வேலையைக் குறைப்பார் என்ற சொலவடை நினைவுக்கு வந்தது. ‘நீ மட்டும் படிக்கிறேன்னு சொல்லிட்டு வெளயாடிக்கிட்டு இருப்பியா.

நீ ஆடற ஆட்டம் தாங்க முடியலையேப்பா. எல்லோரும் துப்பாக்கியால சுட்டுக்கிறது, வேகவேகமாக் காரை ஓட்டி மோத வைக் கறது , சிங்கம் புலி மத்த வெலங்குகளைக் கொடூரமா வேட்டையாடி இரத்தம் குடிக்க றதுன்னு , பாக்கவே கொடுமையா இருக்கு தையா ?’ என்று மணிக்குட்டி பேசியதைக் கேட்டதும் இனியனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

‘ஏய் குட்டி ! என்ன வாய் ரொம்ப நீளுது. பொழுது போக்கவும் எல்லோரையும் சிரிக்க வைக்கவும் நாம எழுதுற கதை கள்ல சண்டை சச்சரவு இருக்கத்தேன். செய்யும். டாமும் செர்ரியும் சண்டைபோ டறதை நீயும் பாத்துருக்கேல்ல..

தொறந்த வாயை மூடாம, மிய்யாவ் மிய்யாவ்னு காலைத் தட்டிச் சிரிச்சுருக்கேல்ல.

ப்ப என்னமோ உண்மைவிளம்பி மாதிரி பேசற ‘என்று கேட்ட இனியனை முறைத்துப் பார்த்து உர்ர்ர் உர்ர்ர் என முறைத்தது மணிக் குட்டி. ’ நீ நெனைக்கறது மாதிரி காட்டுக்குள்ள இருக்கற சிங்கம் புலி ஓநாய்கள்லாம் எந்நேரமும்வேட்டையாடிக்கிட்டு இருக்கற தில்லை. தெரியுமா ? ‘மணிக்குட்டி ஏங்கிட்டக் கதைவிடாதே ‘எனச் சிரித்தான் இனியன்.

ஆதாரம் இல்லாமல் பேசினால் இனியனை நம்பவைக்க முடியாது என்று எண்ணிய மணிக்குட்டி, ‘ சரி இனியா வா அந்த மலையடிவாரத்துக்கிட்ட இருக்கற கடம்ப வனத்துக்குப் போய் வரலாம்.’ என்றது. எதற்கும் பாதுகாப்புக்கு இருக்கட்டுமே எனக் கையில் ஆளுயரத் தடியோடு இனியன் மணிக்குட்டி காட்டிய வழியில் புறப்பட்டான். இ

னியனுக்கு முன்னால் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது மணிக்குட்டி. ‘ டேய் பொறுத்துப் போடா ‘ என்று இனியன் உரக் கக் கூப்பிட்டும் பயனில்லை.

அதன் தாத் தா பாட்டி வாழ்ந்த இடத்தை ஆவலோடு பார்ப்பதற்குப் பூனையார் மணிக்குட்டி புதுப்பொலிவோடு ஓடிக்கொண்டிருந் ததார். அடர்ந்த மரங்கள் ; இனிய கனிகள் காய்த்துத் தொங்கும் மரங்கள் ; திரிக்கப் பட்ட வடக்கயிறுகள் போல நீண்டு வளர்ந்த மரங்களில் இருந்து விழுதுகள் ; விழுது களைப் பிடித்துக் கொண்டு தாவிக்கொண் டிருக்கும் குரங்குகள்.

மணிக்குட்டியைப் பார்த்தவுடன் சில குரங்குகள் கொர்ர் கொர்ர் எனக் கூக்குரல் எழுப்பின. ‘டேய் மணி வா, இந்தப்பக்கம்.உன்னைப்பார்த்து மொறைக்குது கொரங்கு’ என்றான் இனியன். ‘

ஐயய்யே..காட்டுக்குள்ள புதுசா யார் வந்தாலும், இல்ல வேற விலங்குகள் வந்தாலும் மரத்தின் உச்சியில இருக்கற கொரங்குகள் இப்பிடி எச்சரிக் கும். புலி, சிறுத்தை, சிங்கம், கழுதைப் புலின்னு எது வந்தாலும் மத்த விலங்கு களுக்கு அறிவிக்கற வேலையைச் செய்யும். இதைக் கேட்ட உடனே ” தப்பிச்சோம் பிழைச்சோம்”னு எல்லாம் தலைதெறிக்க ஓடிடும். ‘சரி..சரி. வா ..நெறையப் பாக்க வேண்டி இருக்கு காட்டுக்குள்ள “ ‘டேய் ..மணி அங்கே பார்.

சிறுத்தை ஒரு மானைத் தொரத்திக்கிட்டு ஓடறதை. அடேங்கப்பா,,என்னா வேகம் ? சும்மா பறக்கற மாதிரி....அடடடா ...மானோட கழுத்தைக் கவ்விருச்சுடா..போச்சு..அநியாயமா கொன்றுச்சுடா..” ‘எது அநியாயம் ? சிறுத்தையோட இயல்பு அது.அதோட பசிக்கு எரை வேண் டாமா ? இனியனுக்கு முகமே வாடிவிட்டது. மனம் நொந்து விட்டது. கணிப்பொறிவிளை யாட்டுகளில் விலங்குகள் சண்டையிட்டுக் கொள்வதையும், கொல்லப்படுவதையும் எவ்விதஉணர்ச்சியும் இல்லாமல் பார்த் துக் கொண்டிருந்த அவனுடைய உள்ளம், இப்போது அழுது கொண்டிருந்தது.

சிந்தனை வயப்பட்ட இனியன் மணி குட்டி சென்ற வழியைப் பின்பற்றி சிலை போல் நடந்து கொண்டிருந்தான்.

அழகிய சிற்றோடை தெரிந்தது. பளிங்குபோல் நீர். குட்டிக் குட்டி மீன்கள்துள்ளி விளையாடிக் கொண்டு இருந்தன. ச

லசலவென நீர் ஓடிய ஒலி அவன் மனதை அன்பாக வருடிக் கொடுத்ததுபொல் இருந்தது.

‘அங்கே பார்..அங்கே பார் என ஓடை யின் மறுகரையை நோக்கி மகிழ்ச்சி கொப் பளிக்கக் கூவியது மணிக்குட்டி.

புலியும் ஒரு சிறுத்தையும் நீர் குடித்துக் கொண்டி ருந்தது. கொஞ்ச தூரம்தள்ளி நான்கு காட் டெருமைகள் அழகாக நீர் குடித்துக் கொண் டிருந்தன. இரண்டு வரையாடுகள் நீர் குடித்த மகிழ்வில் அங்கேயே புல்வெளி யில் மேய்ந்து கொண்டிருந்தன.

என்னடா இது ! அதிசயமா இருக்கு. எப்படா எதையாவது அடிச்சுத் திங்க லாம்னு அலையற விலங்குகளோட, பயத் துல எப்பப் பாத்தாலும் ஓடிக்கொண்டி ருக்கற விலங்குகள் சேர்ந்து தண்ணி குடிக் கறதைப் பாத்தா, இது கனவா ? இல்லை நனவா? ன்னு இருக்கு ..என இனியன் சொன் னதில் இருந்து அவன் வியப்பின் உச்சத் தில் இருந்து மீளவில்லை எனத்தெரிந்தது.

மிய்ய்யாவ்..என மணிக்குட்டி மியா மியா மியாவ் என்று சிரித்தபடி பேசத் தொடங்கியது. விலங்குகள் பசிக்கு எரை தேடும் போதுதான் இன்னொன்னைக் கொல்லும். மத்த நேரங்கள்லஒன்னுக்கொன்னு கண்டுக்காமப் போய்விடும்.

ஆனா மனுசங் கதான் ஒருத்தருக்கு ஒருத்தர் சின்னச் சின்னப் பிரச்சனைக்கெல்லாம் தேவையே இல்லாமக் குத்திக்கறது, வெட்டறதுன்னு சீரழீறீங்க. ‘நாம செய்யற செயல் எல்லாத் துக்கும் சரியான காரணம் இருக்கோணும்

. குடும்பத்துலமுப்பாட்டன் ஏதோ தப்பு செஞ் சான்னு பேரனைக் கொல்வீங்க ; சாமிக்கு நோம்பெடுத்துக்கொண்டாடும்போது நாம் பெருசா, இல்லை நீ பெருசான்னு மொதமரியாதை யாருக்குன்னுவெட்டு குத்துல எறங்குவீங்க. நீயும் இப்பிடிக் கதை யாப் பாத்தேன்னு வச்சுக்க, ஓம் மனசும் நஞ்சாயிரும்டீ.

இப்பிடி ஆகாத கதைகளப் பாத்துத் தான் அமெரிக்காவில அஞ்சு வயசுப் பையனெல்லாம் துப்பாக்கி எடுக்கிறான்.

திருந்துங்கப்பா. ‘மணிக்குட்டி சொல்லி முடித்தது. பேசிக்கொண்டே இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த எழில்கொஞ்சும் காடும் இனியனுடன் கூடவே வந்து கொண்டிருந்தது தென்ற லைத் துணைக்கழைத்துக் கொண்டு.