மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு
13 Jan 2026, 3:17 pm
<p><strong>மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு</strong></p>
<p>உதகை, ஜன.13- குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் திங்களன்று போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்த கிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட் களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலை யில், குன்னூர் -மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ் சாலையில், காந்திபுரம் அருகே திங்கள்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், உதகை மற்றும் குன்னூரிலிருந்து மேட்டுப் பாளையம் செல்லும் வாகனங்களை கோத்தகிரி வழி யாக திருப்பிவிட்டனர். தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் மூலம் மண் குவியலை அப் புறப்படுத்தினர். இதேபோல், குன்னூர் அருகே உள்ள டார்லிங் டன் பிரிட்ஜ் பகுதியில் மரம் ஒன்று சாலை யில் விழுந்ததால். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங் கள் என 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந் தன. இதுமட்டுமின்றி, நகராட்சியின் கழிப்பிட கட்டி டம் முழுமையாக சேதமடைந்தது. தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்சார ஊழியர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணி யில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
