முந்தய பக்கம்

சேதுபாவாசத்திரம் அருகே 84 பயனாளிகளுக்கு மனைப் பட்டா வழங்கல்

16 Nov 2025, 3:30 pm
சேதுபாவாசத்திரம் அருகே  84 பயனாளிகளுக்கு மனைப் பட்டா வழங்கல்
<p><strong>சேதுபாவாசத்திரம் அருகே &nbsp;84 பயனாளிகளுக்கு மனைப் பட்டா வழங்கல்</strong></p> <p>தஞ்சாவூர், நவ.16- &nbsp;தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு கலைஞர் நகர், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில், பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. &nbsp;நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து, 84 பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்கி சிறப்புரையாற்றினார். திமுக தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர் டி. பழனிவேல் முன்னிலை வகித்தார். &nbsp;இதில், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், ஒன்றியக் கழகச் செயலாளர்கள், மாநில மீனவர் அணி துணைச் செயலாளர், பெருமகளூர் பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். &nbsp;முன்னதாக, திமுக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினருமான பூமிநாதன் வரவேற்றார். ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் லெட்சுமணன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram