ஆட்டோ சங்கத் தலைவர்களை கைது செய்த காவல்துறையைக் கண்டித்து போராட்டம்
21 Nov 2025, 2:51 pm
<p><strong>ஆட்டோ சங்கத் தலைவர்களை கைது செய்த காவல்துறையைக் கண்டித்து போராட்டம்</strong></p>
<p>சாத்தூர், நவ.21- திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சிஐடியு சார்பில் ஆட்டோ நிறுத்தம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆட்டோ நிறுத்தம் அமைத்து த்தரக் கோரி ஜனநாயக முறையில் போராட்டம் நடை பெற்றது. இதில் ஈடுபட்ட சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். கே.என்.அனிபா உள்ளிட்ட ஆட்டோ சங்கத் மாவட்ட தலைவர்களை காவல்துறை யினர் இரவோடு இரவாக கைது செய்தனர். இதனைக் கண்டித்தும், பொய் வழக்கை இரத்து செய்யக் கோரியும் விருது நகர் மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் சாத்தூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செய லாளர் கே.விஜயகுமார் தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்டத் தலைவர் மகேந்திர குமார் பேசினார். பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சி.பாண்டி யன் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில், பி.பால சுப்பு. முனியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இராஜபாளையம் விருதுநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் இராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார் .செய லாளர் தங்கராஜ், சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் கணேசன்,சிஐடியு கன் வீனர் கண்ணன் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகி கள் முனியாண்டி, தர்மராஜ் காத்தப்பன், சன்னாசி, சங்கரசுப்பு, சிபிஎம் நகரச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.மகாலட்சுமி நிறை வுரையாற்றினார்.</p>
