தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

7 Jan 2026, 4:05 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

தருமபுரி, ஜன.7- பட்டா மாற்றம் செய்ய ரூ.13 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஸ்ரீராம புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (41). இவரது குடும்பத் துக்கு சொந்தமான சுமார் 86 சென்ட் நிலத்தை இவரும், இவருடைய சகோதரரும் பாகப்பிரிவினை செய்து கொண்ட னர். அந்நிலத்துக்கு தனித்தனி பட்டா அளிக்கக் கோரி,  குமார் இணையதளத்தில் விண்ணப்பித்தார். இந்த விண் ணப்பம் தொடர்பாக, காரிமங்கலம் வட்டாட்சியரகத்தின் கட் டுப்பாட்டிலுள்ள கம்பைநல்லூர் பகுதி நில அளவையராக பணியாற்றி வரும் சௌந்தரராஜன் (32), அந்நிலத்துக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொ டர்ந்து, தனிப்பட்டா வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் லஞ்சமாக அளிக்க வேண்டும்  என குமாரிடம் கூறியுள்ளார். முதற்கட்டமாக ரூ.1,700 வாங்கிய  சௌந்தரராஜன், மீதத் தொகையை அளிக்குமாறு கூறியுள் ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார் இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு (லஞ்ச ஒழிப்பு) பிரிவு போலீசாரிடம் புகாரளித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் நில அளவையரை தொடர்புகொண்ட குமார், கம்பை நல்லூர் பிரிவு சாலை பகுதியில் உள்ள பேக்கரி அருகே இருந்த சௌந்தரராஜனிடம் ரசாயனம் தடவிய ரூ.13 ஆயி ரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலாளர் போலீசார் சௌந்த ரராஜனை கையும், களவுமாக கைது செய்தனர். இதன்பின்  அவரை தருமபுரி ஊழல் தடுப்புப்பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அவ ரது வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள் ளப்பட்டது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள்

பொள்ளாச்சி, ஜன.7- ஆனைமலை புலிகள்  காப்பகத்தில் குளிர்காலத் திற்கு பிந்தைய வனவிலங்கு கள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை ஆகிய நான்கு வனசரகத்தில் புதனன்று முதல் ஜன.13 வரையிலான ஏழு நாட்கள் வனவிலங்குகள் கணக்கெ டுப்பு பணிகள் துவங்கி நடை பெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனச்சரக அலுவலர், வன வர், வனக்காப்பாளர், வனக் காவலர், வேட்டை தடுப்பு  காவலர், வன உயிரியலாளர் என ஆறு பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது.  இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறுகையில், முதல் மூன்று நாட்கள் புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளை அதன் காலடி தடம், எச்சம், நக கீறல்கள் போன்றவற்றை வைத்து நேர்முகமாகவும், மறைமுக மாகவும் கணக்கெடுக்கப் படும். அடுத்த மூன்று நாட் கள் மொத்தம் உள்ள நான்கு வனசரகத்திலும் ஊன் உண்ணிகள் பயணிக்கும் மற்றும் இறை விலங்குகள் வாழும் 62 நேர்கோட்டு  பாதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டு மான், குரங்கு, தாவர உண்ணிகள் போன்றவை கணக்கெடுத்து, அவைகள் வாழ தகுதியான புல் போன்ற தாவரங்கள் போதிய அள வில் உள்ளதா உள்ளிட்டவை கண்டறியப்பட்டு பதிவு செய் யப்படும். ஏழாவது நாள்  பிணம்தின்னி கழுகுகள் உள்ளனவா போன்ற ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அறிக்கையை வனத் துறை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும், என்ற னர்.

மருத்துவ மாணவி உயிரிழப்பு

சேலம், ஜன.7- சிவராஜ் சித்தா மருத்துவக்கல்லூரி மாணவி சந்தேகத்திற் கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், சித்தர் கோவில் மெயின் ரோடு பகுதியில் செயல்படும் சிவராஜ் சித்த மருத்துவக்கல்லூரி யில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், கல்லூரி அருகில் வீடு எடுத்து தனது தோழியுடன் இறுதி  ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இம்மாணவி திரு மணமான நபரை காதலித்து வந்ததாகவும், இப்பிரச்சனை சம்பந்தமாக மாணவியின் தந்தை செவ்வாயன்று நேரில்  சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதன்பின் மாணவி சந் தேகத்திற்கிடமான வகையில் இறந்துள்ளார். இதைப்பார்த்த  அவருடைய தோழி அதிர்ச்சியடைந்து, இரும்பாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மாணவியின் தந்தை பேசிவிட்டு சென்ற நிலையில், அவர் தற்கொலைக்கு முயன் றாரா? அல்லது ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளதா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். மாணவியின் உடல் சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.