முந்தய பக்கம்

நில அளவை அலுவலர்கள் ஒன்றிய மாநில பயிலரங்கம்

24 May 2026, 1:13 am
நில அளவை அலுவலர்கள் ஒன்றிய மாநில பயிலரங்கம்

நில அளவை அலுவலர்கள் ஒன்றிய மாநில பயிலரங்கம்

பொள்ளாச்சி, மே 23- தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியத்தின் மாநில மையம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பயிலரங்கம் பொள்ளாச்சியில் நடைபெற் றது.

கோவை சாலையிலுள்ள ஸ்ரீ சக்தி கன் வென்ஷன் சென்டரில் வெள்ளியன்று துவங் கிய இப்பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) வரை நடைபெற உள்ளது. பயிலரங் கின் முதல் நாள் நிகழ்விற்கு ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் ஜே. இராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அண்ணா.

குபேரன் நிகழ்வை ஒருங் கிணைக்க, கோவை மாவட்டத்தலைவர் நிமலன் கிறிஸ்டோபர் வரவேற்றார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான மு.பாஸ்கரன் பயிலரங் கத்தைத் துவக்கி வைத்தார்.

பின்னர், முனை வர் பாரதி கிருஷ்ணகுமார், ”நாமென ஒன் றாய் எழுவோம்...” என்ற தலைப்பில் சிறப் புரையாற்றினார். ச

னியன்று சிஐடியு முன் னாள் மாநிலத் தலைவர் அ.சவுந்திராசன் பங் கேற்று, ”உழைப்பும்.. மதிப்பும்..” என்ற கருப்புபொருளில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர் சம்மேள னத்தின் செயல்தலைவர் எம். துரைபாண்டி யன், ” ஊதியக் குழுவும்.. ஓய்வூதியமும்..” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில், பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த நில அளவை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram