ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிட வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்தம்; ஆர்ப்பாட்டம்
19 Nov 2025, 3:33 pm
<p><strong>ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிட வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் வேலை நிறுத்தம்; ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, நவ.19- ஒப்பந்த முறை பணி நியம னத்தை கைவிட வேண்டும் உள் ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவ லர் ஒன்றிப்பு சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிலம் சார்ந்த அனைத்து பரா மரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக் திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டு பதவி உயர்வுக்காக தகுதி பெற்றும் பணியிடம் இல்லாததால் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ள அனைவரையும் 2025 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இணைத்து பதவி உயர்வு வழங்க வேண்டும். நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவு கள் அறிவிக்கப்படாமல் உள்ள தால், காலிப்பணியிடம் நிரப்பப்ப டாமல் உள்ளது. பட்டா மாறுதல் உள்ளிட்ட நில அளவைப்பணி களை கருத்தில் கொண்டு உடன டியாக நில அளவர் பணியிடங் களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய் வதை கைவிட வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பில் காலவரையற்ற போராட் டம் செவ்வாயன்று துவங்கியது. இந்நிலையில், புதனன்று பல் வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கு. சின்னராசு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரா.கல் பனா, மாவட்டச் செயலாளர் சி. பிரபு, பொருளாளர் மா.முருகன், இணைச்செயலாளர் மா.முரளி தரன் உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.தெய்வானை, கிராம நிர் வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் கு.அகிலன் அமிர்தராஜ், புல உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் பெருமாள், கிராம ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் சுரேஷ், நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். ஈரோடு ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, நில அளவை அலுவ லர் ஒன்றிப்பின் மாவட்ட நிர்வாகி ப.கௌரிசங்கர் தலைமை வகித் தார். கோட்டத் தலைவர் இரா.சந்திர குமார் வரவேற்றார். மாவட்ட இணைச்செயலாளர் மு.நவமணி கண்டன், துணைத்தலைவர் இரா.சேதுமாதவன், அரசு ஊழியர் சங்க மேனாள் தலைவர் கே.ராஜ் குமார், மாவட்டத் தலைவர் ச. ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண் டனர். மாநிலச் செயலாளர் த.சக்தி வேல் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் நா.கண்ண பிரான் நன்றி கூறினார்.</p>
