முந்தய பக்கம்

நில உரிமை பாதுகாப்பு மாநாடு

21 Feb 2026, 4:39 pm
நில உரிமை பாதுகாப்பு மாநாடு
<p><strong>நில உரிமை பாதுகாப்பு மாநாடு</strong></p> <p>கடலூர், பிப். 21- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நில உரிமை பாதுகாப்பு மாநாடு கடலூர் அருகே வெள்ளக்கரையில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர் எம்.கடவுள் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் லெனின் வரவேற்றார். மாவட்டத் தலை வர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தொடக்க உரை யாற்றினார். ஒன்றிய செயலாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் ஜே.ராஜேஷ்கண்ணன் ஆகியோர் வேலை அறிக்கை மற்றும் தீர்மானங்களை வாசித்தனர். மாநாட்டில், வெள்ளக்கரை, மலைய டிக்குப்பம், வெ.பெத்தாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு வீடு மற்றும் நிலத்திற்குப் பட்டா வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன், பொரு ளாளர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram