தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலப் பிரச்சனை: இரவோடு இரவாக அறிவிப்பு பலகை வைத்த மாவட்ட நிர்வாகம்    

8 Feb 2026, 3:55 pm
நிலப் பிரச்சனை: இரவோடு இரவாக அறிவிப்பு பலகை வைத்த மாவட்ட நிர்வாகம்    
<p><strong>நிலப் பிரச்சனை: இரவோடு இரவாக அறிவிப்பு பலகை வைத்த மாவட்ட நிர்வாகம் &nbsp; &nbsp;</strong></p> <p>திருப்போரூர், பிப்.8- &nbsp;செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் 13-வது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பூர்வீகக் குடிகளை ஆக்கிரமிப் பாளர்கள் எனக் கூறி அகற்றும் முயற்சியில் அறநிலை யத்துறையும் மாவட்ட நிர்வாகமும் ஈடுபட்டுள்ளன. ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், சிபிஎம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வரு கின்றன. முன்னதாக, ஜனவரி 6 வரை நிலத்தை அகற்ற மாட்டோம் என்றும், அதற்குள் நீதிமன்றத்தை அணுகுமாறும் அதிகாரி கள் உறுதியளித்திருந்தனர். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. கடந்த வெள்ளியன்று (பிப். 6), சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் வட்டாட்சியர் சரவணன் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில், நீதிமன்ற உத்தரவை மதித்து அறிவிப்பு பலகை வைக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் &ldquo;நிலம் மீட்கப் பட்டதாக&rdquo; அறிவிப்பு பலகை வைத்துள்ளது. நீதிமன்ற உத்தரவு வரும் முன்பே, உரிமையாளர்களிடம் தெரிவிக் காமல் நள்ளிரவில் கள்ளத்தனமாக பலகை வைத்தது ஏன் எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நிலம் இன்னும் தங்கள் வசமே இருப்பதாகத் தெரிவித்துள்ள மக்கள், &nbsp;அதிகாரிகளின் இந்த அத்துமீறலுக்குக் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.