தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஸ்கேன் இந்தியா

20 Nov 2025, 3:46 pm
ஸ்கேன் இந்தியா

ஸ்கேன் இந்தியா

நிறுத்து..!

மதத்தின் பெயரால் நிலங்களைப் பறிக்கும் முயற்சிக்கு மத்தியப் பிரதேச மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். முதல்வர் பொறுப்பை ஏற்றதும் தனது பகுதியில் பெரும் திட்டம் ஒன்றை நிறைவேற்ற மோகன் யாதவ் முடிவெடுத்தார். 3 ஆயிரத்து 360 ஹெக்டேர் நிலத்தை அதற்காகப் பயன்படுத்துவது அவரது திட்டமாகும். பல கிராமங்கள் காணாமல் போகும் என்பதால் மக்களும், விவசாயிகளும் கிளர்ந்தெழுந்தனர். ஆனால், இது மெகா ஆன்மீகத்தலம் என்று திசைதிருப்ப ஆளும் பாஜக தரப்பு முயன்றது. மக்களின் கொந்தளிப்பைக் கண்ட ஆர்.எஸ்.எஸ். தனது விவசாயிகள் அமைப்பையும் களத்தில் இறக்க வேண்டிய கட்டாயம் வந்தது. “நிறுத்து” என்பது பொதுவான முழக்கமாக மாறியது. வேறு வழியில்லாமல் தனது திட்டத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஒப்புக் கொண்டுள்ளார்.

உயர்மட்டம்

மகாராஷ்டிராவில் மாநில நிர்வாகம் படுமோசமான நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நீடிக்கிறது. அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகள் அதிகாரிகள் மட்டத்தில் திருத்தப் படுகிறதாம். இந்தக் குற்றச்சாட்டை சாதாரணமான ஆட்கள் யாரும் சுமத்தவில்லை. முதல்வர் பட்னாவிசே சொல்லியிருக்கிறார். தங்களுக்கேற்ற வகை யில் அமைச்சரவையின் நகல் ஒன்று திருத்தப்பட்டதைப் பார்த்து அவர் அதிர்ந்து போய், அந்த அதிகாரியை அழைத்து கண்டித்தாராம். இனிமேல் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்றாராம். இது சாதாரண குற்றமல்ல. பொதுவாக, இப்படியொரு சம்பவம் நடந்தால் சம்பந்தப்பட்ட அதி காரி இடமாற்றம் செய்யப்படுவார். ஆனால், இந்த அதிகாரி தனது இடத்தில் தொடர்கிறார். முதல்வரையும் மிஞ்சிய சக்தி எது என்று தலைமைச் செயலகத்தில் விறுவிறுப்பான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

காகிதப்புலி..?

பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி, நாங்கள் வெறும் காகிதப் புலிகளா என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். ஒரு வழக்கை அவர் விசாரிக்கிறார். அதில் மாவட்ட நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைத் தலைவர் ஆகிய இருவரையும் கண்டிக்கிறார். அடுத்த நாளே, இந்த வழக்கை அவரிடமிருந்து பிடுங்கி, மற்றொரு நீதிபதியின் வசம் ஒப்படைக்கிறார் மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி. தன்னிடம் இருந்து வழக்கு மாற்றப்படுகிறது என்றவுடன் அவர் சும்மாயிருக்கவில்லை. எந்த அடிப்படையில் இந்த மாற்றம்.. என்று கேள்வி எழுப்பியுள்ளார். கீழமை நீதிமன்றங்கள் வெறும் காகிதப் புலிகளா என்று முதன்மை நீதிபதியின் உத்தரவின் மீது கருத்து தெரிவித்திருக்கிறார். மாவட்ட நிர்வாகத்தைக் காப்பாற்றும் முயற்சி இது என்றும் கண்டித்துள்ளார்.

தொடர்கதை

திரிபுராவில் பாஜகவின் இரண்டு சிறிய அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாகவே ஆளும் கூட்டணிக்குள் வெட்டு, குத்து என்று நிர்வாகம் நகராமல் நிற்கிறது. மக்கள் பிரச்சனைகளில் கவனம் இல்லை. ஒற்றுமைப்படுத்தும் கூட்டம் என்று ஒன்றை நடத்துகிறார்கள். முதல்வர் மாணிக் சஹா பங்கேற்கிறார். கூட்டம் நிறைவுபெற்ற பிறகுதான் அலுவலகங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். பிரதமர் மோடியின் படங்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன. கூட்டணிக்கட்சியான திப்ரா மோதாவினர்தான் அதைச் செய்திருக்கிறார்கள். மாறி, மாறித் தாக்கிக் கொள்கிறார்கள். இது தொடர்கதையாகி உள்ளது. இருவரின் மோதல் என்பது மக்கள் பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதுதான் என்று பிரதான எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.