நிலம் ஆக்கிரமிப்பு – தீ குளிக்க முயற்சி
19 Jan 2026, 2:23 pm
<p><strong>நிலம் ஆக்கிரமிப்பு – தீ குளிக்க முயற்சி</strong></p>
<p>சேலம், ஜன.19- சொந்த இடத்தை ஆக்கிரமித்து வழித்தடம் விடாமல் மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பெட் ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால், சேலம் ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி கட்டிக்காரனுர் பகுதியை சேர்ந்த செல்வி (30), கணவர் மதியழகன் (40), மாமியார் கமலா (65), மாமனார் மணி (70), பெரியம்மா பெருமாயி ஆகிய 5 பேர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அப் போது அவர்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து 5 பேரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் இதனை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி பாதுகாத்தனர். இதுகுறித்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கமலா என்ப வர் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்நிலை யில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் உறவி னர்களான இரண்டு பேர் எங்கள் நிலத்தில் உள்ள வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு கழிவறை கட்டி உள்ளனர். இதனால் வழித்தடம் இல்லாமல் கடந்த ஆறு வருடங்களாக தவித்து வந்தோம். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது அப்படித் தான் செய்வோம் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனக்கூறி மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புகார் தெரி வித்தோம். ஆனால் அதிகாரிகள் அவர்களுக்கு ஆதர வாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். வழித்தடம் இல்லாமல் எங்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. தொழிலுக்கும் செல்ல முடியாமல் தவித்து வரு கிறோம். வீட்டிலேயே முடங்கி கிடக்க முடியாத சூழ் நிலையில் இருப்பதை விட இறப்பதே மேல் என நினைத்து எங்கள் குடும்பத்தில் உள்ள ஐந்து பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து இங்கு வந்தோம். எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய விசாரணை நடத்தி எங்கள் நிலத்தில் வழித்தடத்தை ஆக் கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை மீட்டு வழித்தடம் செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.</p>
<p> </p>
