ஆனைமலை பகுதியில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு
23 Feb 2026, 5:35 pm
<p><strong>ஆனைமலை பகுதியில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு</strong></p>
<p>திருப்பூர், பிப்.23- திருப்பூர் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் நடை பெற்ற நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பில் பல்வேறு வகையான பறவை இனங்கள் காணப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளின் ஒரு பகு தியாக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் திருப்பூர் வனக் கோட்டத்தில் இந்த மாதம் நடைபெற்றது. இந்தக் கணக்கெ டுப்பில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் என மூன்று விதமான சூழல்களில் பிரித்து விரிவான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட ஆனைமலை புலி கள் காப்பகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப் பில், மொத்தம் 23 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 10 இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலும், 8 இடங்கள் கிராமப்புறங்களிலும், 5 இடங்கள் நகர்ப்புறப் பகுதிகளிலும் அமைந்திருந்தன. இந்தப் பிரிவுகளில் பறவையினங்களின் இருப்பு, எண்ணிக்கை மற்றும் வாழ்விடம் குறித்து பதிவு செய் யப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் பல்வேறு வகையான பறவை இனங்கள் காணப்பட்டன. அவற்றில் சிட்டுக்குருவி, தேன் சிட்டு, வால் காக்கை, மைனா, குயில், கொக்கு, நாரை, வல் லூறு, கதிர்க்குருவி, சோளக்குருவி (100 க்கும் மேற்பட் டவை), மீன்கொத்தி, கருந்தோள் பருந்து, செண்பகம், கல் லுக்குருவி, புறா, பனங்காடை, நாட்டு உழவாரன், பனை உழவாரன், சின்னான், தையல்சிட்டு, கரிச்சான், மாங்குயில், கொண்டலாத்தி, சிலம்பன் மற்றும் காகம் போன்ற பறவை இனங்கள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, வனப்பகுதிகளில் கருந்தோள் பருந்து, வல் லூறு போன்ற இரை விழுங்கும் பறவைகளும், நீர்நிலை களை ஒட்டிய பகுதிகளில் மீன்கொத்தி, கொக்கு, நாரை போன்ற நீர்வாழ் பறவைகளும் அதிகளவில் காணப்பட்ட தாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர். மேலும், விவசாய நிலங்கள் நிறைந்த கிராமப்புறங்களில் சோளக்குருவிகள் மற்றும் கதிர்க்குருவிகள் மிக அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவி, மைனா, காகம் மற்றும் புறாக்களின் இருப்பு கணிசமாக இருந்தது. கணக்கெ டுப்பில் பதிவான தரவுகள் எதிர்காலத்தில் இப்பகுதிகளின் சூழல் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கும், பறவைகளின் பாதுகாப்பிற்கான மேலாண்மைத் திட்டங்களை வகுப்பதற் கும் உதவிகரமாக இருக்கும் என்று வனத்துறை அலுவ லர்கள் தெரிவித்தனர்.</p>
